செலவினங்களைச் சமாளிக்க ஜிஎஸ்டி உயர்வு அவசியம்

செலவினங்களைச் சமாளிக்க ஜிஎஸ்டி உயர்வு அவசியம்

2 mins read
f8966946-3fdc-459d-b2ee-d77ff52fb213
-

சிங்­கப்­பூ­ரின் மக்­கள்­தொகை விரைவாக மூப்­ப­டை­வ­தால் பொருள், சேவை வரியை (ஜிஎஸ்டி) உயர்த்­து­வது அவ­சி­ய­மா­கிறது என பிர­த­மர் லீ சியன் லூங் தமது மாண்­ட­ரின் உரை­யில் குறிப்­பிட்­டார்.

மூத்­தோ­ருக்கு சிறந்த பரா­மரிப்பை வழங்க சிங்­கப்­பூர் தயா­ராக இருப்­பது அவ­சி­யம். சுகா­தாரப் பரா­ம­ரிப்­புச் செல­வு­க­ளைக் குறைத்து கூடு­தல் மருத்­துவ உதவி­களை மூத்த சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்­கும் அவர்­க­ளின் குடும்­பத்­தி­ன­ருக்­கும் வழங்­கு­வது இதில் அடங்­கும்.

மூத்­தோர் எளி­தில் மருத்­துவ சேவை­க­ளைப் பெறு­வ­தற்கு வச­தி­யாக அதி­க­மான மருத்­து­வ­ம­னை­களும் பல­துறை மருந்­த­கங்­களும் இன்­ன­பிற வச­தி­களும் கட்­டப்­பட வேண்­டும். இவை­யெல்­லாம் சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு மற்­றும் சமூகச் செல­வி­னம் கடு­மை­யாக அதி­க­ரிப்­ப­தையே உணர்த்­து­வ­தாக திரு லீ தெரி­வித்­தார்.

"ஜிஎஸ்­டியை உயர்த்­தா­மல் இருப்­பது அர­சி­யல் ரீதி­யாக பல­ன­ளிக்­க­லாம். ஆனால் அது பொறுப்­பற்ற செய­லாக இருக்­கும்," என்­றார் அவர்.

"செல­வுக்­குப் போதிய பணம் இல்லை என மக்­கள் கவ­லைப்­படும்­போது அர­சாங்­க­மும் தன்­னி­டம் போது­மான பணம் இல்­லா­ததை நினைத்து வருத்­தப்­ப­ட­லாம்," என்று கூறிய பிர­த­மர், குறைந்த வரு­மானக் குடும்­பத்­தி­ன­ரைப் பரா­மரிப்­பதற்­கும் மூத்­தோ­ருக்­கான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தேவை­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கும் போது­மான வளங்­க­ளைப் பெறா­விட்­டால் அது கவ­லைக்­கு­ரி­ய­தாக இருக்­கும் என்­றார்.

"ஆறில் ஒரு சிங்­கப்­பூ­ரர் 65 வய­தைக் கடந்­த­வ­ராக உள்­ளார். 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் இந்த எண்­ணிக்கை நான்­கில் ஒரு­வர் என்று அதி­க­ரிக்­கும். அப்­போது நமது முதிர்ச்­சி­ய­டைந்த பேட்­டை­கள் சீக்­கி­ரம் மூப்­ப­டைந்­த­வர்­க­ளைக் கொண்­டி­ருக்­கும்," என்­றார்

திரு லீ.

1980களில் தாம் முதல்முறையாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­போது தமது டெக் கீ தொகுதி குடி­யி­ருப்­பா­ளர்­களில் மண­மு­டித்த இளம் தம்­ப­தி­யி­னர் ஏரா­ள­மாக இருந்­த­தாக அவர் சொன்­னார். ஆனால் தற்­போது அவர்­களில் பெரும்­பாலா­னோ­ருக்கு ஊன்­று­கோ­லும் சக்­கர நாற்­கா­லி­யும் தேவைப்­ப­டு­வ­தாக திரு லீ குறிப்­பிட்­டார்.

"வயது முதிர்ந்த நிலை­யி­லும் அவர்­கள் சமூக நட­வ­டிக்­கை­களில் தொடர்ந்து பங்­கேற்­கி­றார்­கள் என்­பதை அறிந்து மகிழ்­கி­றேன். அதே­நே­ரம், வரும் காலங்­களில் அவர்­களுக்­கான சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­பு செல­வு­கள் நிச்­ச­ய­மாக உய­ரும் என்­ப­தால் அவர்­க­ளுக்­காக நான் கவ­லைப்­ப­டு­கி­றேன். என­வே­தான் நமது மூத்­தோரை சிறந்த முறை­யில் பரா­ம­ரிக்க நாம் தயா­ராக வேண்­டும்.

"விவே­க­மான நிதி நிர்­வா­கத்­தை­யும் போது­மான நிதிக் கையிருப்­பை­யும் கொண்­டி­ருந்­த­தால் இதர நாடு­க­ளைக் காட்­டி­லும் கொவிட்-19 தொற்று காலத்தை சிங்­கப்­பூர் சிறப்­பான முறை­யில் சமா­ளித்­தது. வருங்­கா­லத் திட்­டத்­திற்­காக நமது குடி­யரசு சேமிப்­பைத் தொட­ரு­வது அவ­சி­யம்," என்று திரு லீ விவ­ரித்­தார்.