விலையுயர்வுக்கு வித்திட்டுள்ள பொருளியல் நிலவர மாற்றங்கள்

விலையுயர்வுக்கு வித்திட்டுள்ள பொருளியல் நிலவர மாற்றங்கள்

2 mins read
f9404477-bd7f-476c-888e-a84fe78115b3
-

அனைத்­து­ல­கப் பொரு­ளி­யல் சூழல் அடிப்­ப­டை­யில் மாறி­விட்­டது என்­றும் அசா­தா­ர­ண­மான கால­கட்­டம் முடி­வுக்கு வந்­து­விட்­ட­தால் உல­க­ள­வில் செல­வி­னங்­களும் பண­வீக்­க­மும் அதி­க­ரித்­துள்­ள­தாக பிர­த­மர் லீ சியன் லூங் கூறி­யுள்­ளார். இந்தச் சூழ­லில் சிங்­கப்­பூ­ரால் அதிக அள­வில் தாக்­கத்­தையே ஏற்­ப­டுத்த இய­லாது.

ஆனால், கூடு­தல் உற்­பத்­தித்­தி­ற­னு­ட­னும் போட்­டித்­தன்­மை­யு­ட­னும் செயல்­ப­டு­வது சிங்­கப்­பூ­ரின் ஆற்­ற­லுக்கு உட்­பட்­டது. அப்­போது­தான் ஊழி­யர்­கள் அதி­க வரு­மா­னம் ஈட்டி உணவு, எரி­பொ­ருள், இதர இறக்­கு­ம­தி­க­ளின் விலை அதி­க­ரிப்பை ஈடு­கட்ட முடி­யும்.

"அந்த வழி­யில் நாம் அனை­வரும் சிறந்த நிலையை எட்ட முடி­யும்," என்­றார் பிர­த­மர் லீ.

தற்­போ­தைய உல­க­ளா­விய சூழ­லில் சிங்­கப்­பூர் எதிர்­நோக்­கும் பொரு­ளி­யல் சவால்­கள் குறித்­தும் பிர­த­மர் லீ பேசி­னார். சிங்­கப்­பூ­ருக்கு உணவு போன்ற இறக்­கு­மதி­களில் ஏற்­பட்­டுள்ள இடை­யூ­று­களும் அவற்­றில் அடங்­கும்.

கொவிட்-19 பெருந்­தொற்­றும் உக்­ரேன் போரும் ஒரு­பு­ற­மி­ருக்க, வர்த்­த­கப் பங்­கா­ளித்­துவ நாடு­களுக்கு இடையே தன்­னைப்­பேணித்­த­னம் அதி­க­ரித்து வரு­வது, சீனா­வின் வளர்ச்சி மற்­றும் ஏற்­று­மதி­கள் மெது­வ­டை­வது, நாடு­கள் தங்­க­ளது விநி­யோ­கத் தொடர்­களை மறு­ஆய்வு செய்­வது, உற்­பத்­தி­யில் நிறு­வ­னங்­கள் தங்­கள் உத்­தி­களை மாற்­று­வது போன்ற புதிய எதார்த்­தங்­கள் உல­கெங்­கும் பண­வீக்க அதி­க­ரிப்­புக்கு பங்கு வகித்­துள்­ளன.

சிங்­கப்­பூ­ரும் அதன் மக்­களும் சிறந்து விளங்­கு­வ­தற்கு பல நிலை­களி­லும் முயற்­சி­கள் எடுக்­கப்­பட வேண்­டும் என்று பிர­த­மர் லீ கூறி­னார்.

"பொரு­ளி­யல் மேம்­பாடு மற்­றும் மறு­சீ­ர­மைப்­பைத் தொடர்­வது, உரு­மாற்ற முயற்­சி­களை இரட்­டிப்­பாக்­கு­வது, ஒவ்­வொரு வாய்ப்­பி­லும் திறன்­களை மேம்­ப­டுத்­திக்­கொள்ள ஊழி­யர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­பது போன்­ற­வற்றை நாம் செய்ய வேண்­டும். சொல்­லப் போனால், நாம் அதைத்­தான் செய்­கி­றோம்," என்­றார் அவர்.

விலை­யு­யர்வு ஒரு­பு­ற­மி­ருக்க, சிங்­கப்­பூ­ருக்கு பொருள் விநி­யோ­க­மும் அண்­மைக்கால­மாக தடை­பட்டுள்­ளது என்று பிர­த­மர் லீ சொன்­னார். கோழி ஏற்­று­ம­திக்கு மலே­சியா தடை விதித்­துள்­ளது, செம்­பனை எண்­ணெய் ஏற்­று­ம­தியை இந்­தோ­னீ­சியா நிறுத்தி வைத்­து இ­ருப்­பது, கோதுமை ஏற்­று­ம­திக்கு இந்­தியா தடை விதித்­தி­ருப்­பது போன்­ற­வற்றை அவர் சுட்­டி­னார்.

"உண­வுப் பற்­றாக்­குறை, விலை­யு­யர்வு போன்­ற­வற்­றால் நெருக்­கு­தலுக்கு உள்­ளா­கும் அர­சாங்­கங்­கள், தங்­க­ளது உள்­நாட்­டுத் தேவை­களுக்கே முத­லி­டம் கொடுக்­கும். எனவே, இது­போன்ற கூடு­தல் நட­வடிக்­கை­களை நாம் எதிர்­பார்க்க வேண்­டும். அவை நம்­மைப் பாதிக்­கும்," என்று அவர் எச்­ச­ரித்­தார்.