எதிர்காலத்தை உறுதிசெய்யும் முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல்

எதிர்காலத்தை உறுதிசெய்யும் முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல்

1 mins read
448890bf-0b8c-46b6-8a5e-c5ff17a263e3
முன்னேறும் சிங்கப்பூர் கலந்துரையாடல் திட்டத்தை அண்மையில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்தார் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது உரையில் தெரிவித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூர் கதை­யின் அடுத்த அத்தி­யா­யத்­துக்கு நான்­காம் தலை­முறைக் குழு முன்­னேறும் சிங்­கப்­பூர் கலந்து­ரை­யா­டல் திட்டம் மூலம் தன்­னைத் தயார்ப்­படுத்­திக்கொண்டு வரு­கிறது.

அத்­திட்­டத்தை அண்­மை­யில் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் தொடங்கி வைத்­தார் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தமது தேசிய தினப் பேரணி உரை­யில் தெரி­வித்­தார்.

இந்­தக் கலந்­து­ரை­யா­டல் திட்டம் சிங்­கப்­பூர் மக்­களில் பல்­வேறு பிரிவினர் எதிர்­கா­லத்­தில் எதைப் பார்க்க, பெற விரும்­பு­கிறார்­கள் என்­பதைத் தெளி­வாக எடுத்­துக்­காட்­டும் என்­றும் திரு லீ விவ­ரித்­தார்.

"இதன் மூலம் ஒவ்­வொரு சிங்­கப்­பூ­ர­ருக்­கும் சிறப்­பான தெரி­வு­களைத் தேர்வு செய்ய அர­சாங்­கம் விரும்­பு­கிறது.

"அவற்­றுள், எந்த வாழ்க்­கைப் பின்­ன­ணி­யி­லி­ருந்து வந்­தி­ருந்­தாலும் அவர்­க­ளுக்கு வாழ்­வில் ஒரு நல்ல தொடக்­கம்; புதி­தா­கத் திரு­ம­ண­மான தம்­ப­தி­க­ளுக்கு கட்டுப்­படி­யா­கக்­கூ­டிய வீட­மைப்பு, குழந்தைப் பரா­ம­ரிப்புச் சேவை; உங்­கள் வாழ்க்­கைத் தொழி­லில் நீங்­கள் மேம்­பட வாய்ப்­பு­கள்; ஆரோக்­கி­ய­மான, மன­நி­றை­வுள்ள ஓய்­வு­காலத்தை உங்­களுக்கு ஏற்­படுத்­திக்­கொடுப்­பது ஆகி­யவை அடங்­கும்," என்று பிரதமர் பட்­டி­ய­லிட்­டார்.

அடுத்த தலை­மு­றை­யில் இவற்றை அடைய நாம் என்ன செய்ய வேண்­டும்? அதற்கு நாம் எந்த வகை­யான இலக்­கு­களை வகுத்­துக்­கொள்ள வேண்­டும்? இந்த இலக்­கு­களை அடைய நாம் எவ்­வாறு அனை­வ­ரை­யும் ஒன்­றி­ணைக்­க­லாம் போன்ற முக்­கி­ய­மான கேள்­வி­களை நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்­டும் என்றும் பிரதமர் லீ தெரிவித்தார்.