உள்நோக்கத்துடன் ஊடகச் செய்திகள்: விழிப்பாக இருங்கள்

உள்நோக்கத்துடன் ஊடகச் செய்திகள்: விழிப்பாக இருங்கள்

1 mins read
9452d954-ca03-4b1e-9653-734c364581fe
உக்ரேன் போருக்கு எதிராக சிங்கப்பூர் வலுவான நிலையை எடுக்க வேண்டி இருந்ததற்கான காரணங்களை பிரதமர் லீ சியன் லூங் விளக்கினார். படம்: நியூயார்க் டைம்ஸ் -

வாட்ஸ்அப், டெலிகிராம், வீசாட் போன்ற சமூக ஊடகங்களில் இடம்பெறும் எல்லா தகவல்களுமே நம்பத்தகுந்தவை, உண்மை என்று நாம் நினைக்கக்கூடும். ஆனால், அத்தகைய செய்திகளில் சில உள்நோக்கத்துடன் தந்திரமாக வெளியிடப்படுபவை.

ஏதாவது ஒரு பக்கம் உங்களை ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது அரசாங்கத்தின் மீது நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் குலைக்கும் நோக்கத்துடன் சில செய்திகள் இடம்பெறுகின்றன என்று திரு லீ சியன் லூங் எச்சரித்தார்.

உக்ரேன் போர் பற்றி வெளி யான சில செய்திகளை அவர் எடுத்துக்காட்டாக் குறிப்பிட்டார்.

ஆகையால், அத்தகைய செய்திகளைப் படிக்கும்போது மிகவும் விழிப்புடன் இருந்துகொள்ளும்படி சிங்கப்பூரர்களை திரு லீ வலியுறுத்திக் கூறினார்.

பாதகமான வெளி ஆதிக்கச் சக்திகளுக்கு உட்படாமல் இருந்தால்தான் நமது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் பாதுகாக்க முடியும் என்றார் திரு லீ.