வியர்வையே விதையாகும்; வெற்றிப்பாதை வசமாகும்

வியர்வையே விதையாகும்; வெற்றிப்பாதை வசமாகும்

2 mins read
d63c5ef0-246e-48b3-8027-48c28e55d42a
-

'பள்ளியில் அறியாததை அறிந்தேன்'

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தான் விரும்­பிய துறை­யில் பயில்­வ­தற்கு வாய்ப்பு கிடைக்­காத நிலை­யில் பிருந்தா செல்­வம், 22, தன் கல்­விப் பய­ணத்­தில் இடை­வெளி விட்­டார். 2018ல் தன் மேல்­நி­லைத் தேர்வை முடித்­து­விட்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் விருப்­பப்­பட்ட துறை கிடைக்­கா­த­தால் அதே துறை­சார்ந்த ஒரு வேலை­யில் அவர் சேர்ந்­தார்.

மருந்­த­கம் ஒன்­றில் உத­வி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றி­ய­து­டன் கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லின்­போது முன்­கள ஊழி­ய­ராக ஆய்­வுக்­கூ­டங்­க­ளி­லும் அவர் பணி­பு­ரிந்­தார். இந்த அனு­ப­வத்­து­டன் மீண்­டும் மறு ஆண்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் வேறு துறை­யில் பயி­லப் பதி­வு­செய்­து­கொண்­டார் பிருந்தா.

"கொவிட்-19 கிரு­மிப் பர­வல் முறி­ய­டிப்பு நட­வ­டிக்­கை­க­ளால் மருந்­த­கத்­திற்கு வரு­வோ­ரின் எண்­ணிக்கை குறைந்­தது. எனக்கு வேலை­யும் அதி­கம் இல்லை. நானும் என் குடும்­பத்­தா­ரும் வீட்­டி­லி­ருந்­த­வாறு ஒரு வணி­கத்­தைத் தொடங்­க­லாம் என்று முடி­வெ­டுத்­தோம்," என்­றார் பிருந்தா.

'நட்­டெல்லா டார்ட்ஸ்', 'குவே டாலியா' போன்ற பல­கார வகை­களை வீட்­டி­லேயே தயார் செய்து விற்­கத் தொடங்­கி­னார். இந்த வர்த்­த­கத்­திற்கு நான்கு சகோ­த­ரர்­களும் பக்­க­ப­ல­மாக இருந்­த­னர் என்­றார் பிருந்தா.

"வரு­மா­னத்தை நிர்­வ­கிப்­பது, என்­னையே நான் மேம்­ப­டுத்­திக்­கொள்­வது, பெற்­றோ­ரைச் சார்ந்­தி­ருக்­கா­மல் வாழ்­வது எனப் பள்­ளி­யில் கற்­றுக்­கொள்­ளாத பாடங்­களை இந்த இடை­வெ­ளி­யின்­போ­து­தான் கற்­றுக்­கொண்­டேன். அதோடு, முன்­ன­தாக நான் பயில விரும்­பிய துறை­யை­விட மேலும் பொருத்­த­மான ஒரு துறை­யில் இப்­போது பயில்­கி­றேன்," என்­றார் பிருந்தா.

"மாண­வர்­கள் துணிந்து தங்­க­ளது திற­மை­களை அறிந்து அவற்றை வெளிப்­ப­டுத்த வேண்­டும். அதற்­காக கல்­விக் காலத்­தின்­போது இடை­வெளி விட்­டா­லும் பர­வா­யில்லை," என்­றார் பிருந்­தா­வின் தந்தை திரு செல்­வம் மாணிக்­கம், 50. முத­லில் அவ­ரும் மற்ற பெற்­றோ­ரைப் போல யோசித்­த­போ­தும் தன் மக­ளின் திறமை மீது அவர் கொண்ட நம்­பிக்­கை­யால் மனம் மாறி­ய­தா­கக் கூறி­னார்.

ஆனால் மகள் இடை­வெளி விட்­ட­து­போல் தம் மகன்­களும் இடை­வெளி விடு­வ­தாக இருந்­தால் அப்போது தனக்­குச் சற்று தயக்­கம் ஏற்­படும் என்­றார் திரு செல்­வம்.

"சிங்­கப்­பூ­ரில் பிறக்­கும் ஆண்­கள், ஈராண்­டு­கள் தேசிய சேவை­யாற்ற வேண்­டி­யுள்­ள­தால் அதன் பின்­னர் படிப்பை மேலும் அவர்­கள் தள்­ளிப்­போட்­டால், திரு­ம­ண­மும் தள்­ளிப்­போ­க­லாம்," என்று கவலை தெரி­வித்­தார் அவர்.