மனநலம் முக்கியம்

மனநலம் முக்கியம்

1 mins read
3d62b3f8-9e3d-4897-930b-b184fdc42fde
-
multi-img1 of 2

தனது மன­ந­லம் கருதி படிப்­பி­லி­ருந்து சிறிது காலம் விடுப்பு எடுத்­துக்­கொண்­டார் 19 வயது ஷெரீன் ஃபர்­ஹானா. 2019ல் சாதா­ரண நிலைத் தேர்­வு­களை முடித்த நிலை­யில் தொடர் தேர்­வு­க­ளா­லும் மதிப்­பீ­டு­க­ளா­லும் தனக்கு மன­வு­ளைச்­சல் அதி­க­ரித்­த­தா­கக் குறிப்­பிட்­டார் அவர்.

அத­னால் தன்­னு­டைய மன­ந­லத்­தைப் பேண ஓர் இடை­வெளி தேவைப்­பட்­டது. ஆனால் வீட்­டி­லேயே முடங்­கி­யி­ருந்­த­தால் அவ­ருக்­குச் சலிப்­புத் தட்­டி­யது.

ஒரு­நாள் உள்­ளூர் பிர­ப­லம் ஒரு­வ­ரின் காணொ­ளி­யைப் பார்த்­த­போது வீட்­டி­லி­ருந்து வணி­கம் செய்­வது பற்றி ஃபர்­ஹா­னா­வுக்­குத் தெரி­ய­வந்­தது. சொந்­தக் காலில் நிற்க விரும்­பிய ஃபர்­ஹானா, வீட்­டி­லி­ருந்து தொழில் செய்­வ­தைப் பற்றி ஆராய்ச்சி செய்­யத் தொடங்­கி­னார்.

ஐந்தே நாள்­களில் ஆப­ர­ணங்­களை விற்­கும் முயற்­சி­யைத் தொடங்­கி­னார். இன்று ஆப­ர­ணங்­கள், வாச­னைத்­ தி­ர­வி­யங்­கள், 'சன்­கி­ளா­சஸ்', அழகு சாதன பொருள்­கள், பிர­பல மிட்­டாய் வகை­கள் என பல்­வேறு பொருள்­களை விற்­பனை செய்து ­வ­ரு­கி­றார்.

"இந்த இடை­வெளி காலத்­தில்­தான் என் திறன்கள் பற்றி அறிந்­து­கொண்­டேன். தொழில் தொடங்­கிய நாளி­லி­ருந்து நானே எனக்கு வழி­காட்­டி­யாக இருக்­கி­றேன்.

"சேமிப்­பைக் கொண்டு தொடர்ந்து வியா­பா­ரத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்­கி­றேன். விற்ற பொருள்­க­ளி­லி­ருந்து வரும் லாபத்தை தொழில் மேம்­ப­டு­வ­தற்­காக முத­லீடு செய்­கி­றேன்," என்­றார் ஃபர்­ஹானா.