சாதனைப் பட்டியலில் இடம்

சாதனைப் பட்டியலில் இடம்

1 mins read
3f12063d-ba9f-492c-bf38-3e5dd44638f4
-

தனது கல்­விக் காலத்­தில் இடை­வெளி எடுத்­துக்­கொண்டு, இரு நிதித் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளைத் தொடங்கி, பின்­னர் 'ஃபோர்ப்ஸ்' நிறு­வ­னம் வெளி­யிட்ட '30 வய­துக்­குக் குறைந்த 30 பேர்' ஆசிய பட்­டி­ய­லில் இடம்­பி­டித்­துச் சாதனை படைத்­த­வர் முக­மது அப்­பாஸ் ஷெய்ட் எப்­ராம்சா, 32.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சேர்ந்த இவர், நண்­பர்­க­ளு­டன் இணைந்து பள்ளி வாழ்க்­கை­யில் சற்று இடை­வெளி விட்டு 'ஒன்­லிஸ்ட்' (Onelyst), 'ரிலாய்' (Rely) ஆகிய இரண்டு நிறு­வ­னங்­க­ளைத் தோற்­று­வித்­தார்.

ஃபோர்ப்ஸ் நிறு­வ­னத்­தின் 2016ஆம் ஆண்டு பட்­டி­ய­லில் இவ­ரின் பெய­ரும் சேர்க்­கப்­பட்­டது. தற்­போது நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பயின்­று­வ­ரும் மாண­வர்­க­ளுக்கு உதவ வழி­காட்­டு­தல் நட­வ­டிக்­கை­யில் இவ­ரும் இவ­ரின் நண்­பர்­களும் ஈடு­பட்டு வரு­கி­றார்­கள்.

"நான் படித்­துக்­கொண்­டி­ருக்­கும்­போது எனக்கு அறி­வுரை கூற யாரும் இல்லை. அதே சவா­லைத் தற்­போ­தைய மாண­வர்­களும் எதிர்­நோக்ககூடாது. என்­னால் இயன்ற அளவு அவர்­க­ளுக்கு வழி­காட்­டு­வேன்," என்று ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு வழங்­கிய பேட்­டி­யில் அப்­பாஸ் குறிப்­பிட்­டார்.