அனுபவமே சிறந்த ஆசான்

அனுபவமே சிறந்த ஆசான்

1 mins read
6bd62bd0-644f-4ca1-9a6f-04bd9bb63e9c
-

பிருந்­தா­வைப் போல் தன் கல்­விக் காலத்­தில் இடை­வெளி விட்ட மற்­றொரு இளை­யர் ராஜ்­மாள் ராம­தாஸ், 26. பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் 2017ஆம் ஆண்டு படிப்பை முடித்­து­விட்டு, பல்­க­லைக்­க­ழ­கம் செல்­வ­தற்­கு­முன் ஈராண்டு இடை­வெ­ளி­யின்­போது கணக்­காய்வு நிறு­வ­னம் ஒன்­றில் முழு­நே­ரச் செய­லா­ளர் பணி­யில் இருந்­தார் அவர்.

தனது பட்­டப்­ப­டிப்­புக்­கான செல­வு­கள் பெற்­றோர் மீது விழுந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தில் உறு­தி­யாக இருந்­தார் ராஜ்­மாள். பல வாடிக்­கை­யா­ளர்­க­ளின் கணக்­கு­க­ளைத் தானே சுய­மாக நிர்­வ­கித்­த­தா­க­வும் ஆசிய நாடு­கள் பல­வற்­றுக்­குச் செல்ல வாய்ப்பு கிடைத்­த­தா­க­வும் பகிர்ந்து­கொண்­டார்.

"என்­மீ­துள்ள அக்­க­றை­யால் படிப்­பைச் சீக்­கி­ரம் முடித்­து­வி­ட­வேண்­டும் என என் பெற்­றோர் என்­னைக் கட்­டா­யப்­ப­டுத்­தி­னார்­கள். ஆனால் எதிர்­கா­லத்­தில் நல்ல வேலை பெறு­வ­தற்கு அனு­ப­வம் அத்­தி­யா­வ­சி­யம். இதை என் பெற்­றோ­ருக்­குப் புரியவைத்து 2019ஆம் ஆண்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில் இணைந்து இவ்­வாண்டு என் கல்­விப் பய­ணத்தை முடித்­து­விட்­டேன்," என்று பெரு­மி­தத்­து­டன் கூறி­னார் ராஜ்­மாள்.

"என் மக­ளின் உறு­தி­யைக் காணும்­போது எனக்கு மிக­வும் பெரு­மை­யாக இருந்­தது. அவள் பேச்­சி­லி­ருந்த தெளி­வும் நம்­பிக்­கை­யும் ஒரு பெற்­றோ­ராக என் கட­மையை நான் நன்­றா­கச் செய்­தி­ருக்­கி­றேன் என்ற உத்­த­ர­வா­தத்தை எனக்கு அளித்­தது," என்­றார் ராஜ்­மா­ளின் தந்தை பழ­னி­சாமி ராம­தாஸ், 58.