சிண்டாவின் 'மெண்டோர் மி' (Mentor Me) வழிகாட்டுதல் திட்டத்தில் வேலை செய்வோர், மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பர். இத்திட்டத்தின்கீழ் அரசு ஊழியரான முகமது அல் அமீன், வழிகாட்டியாக உள்ளார்.
"மாணவர்களின் பலங்களும் பலவீனங்களும் ஆராயப்பட்டு ஆலோசனை வழங்கப்படும். வெற்றி என்பதன் பொருள் மாறி வருகிறது. கல்விக் காலத்தில் இடைவெளி விடும்போது வேலை அனுபவமும் பலதரப்பட்ட நபர்களுடனான இணைப்பும் இன்றைய காலகட்டத்தில் முக்கியமாகக் கருதப்படுகின்றன. எனவே, இடைவெளி விடும் காலத்தில் இளையர்கள் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டு அவற்றைத் தங்களுக்குச் சாதகமாக பயன்
படுத்திக் கொள்வது அவசியம்," என்று குறிப்பிட்டார் அமீன்.

