ஊடக உள்ளடக்கம்; அரசாங்கக் கொள்கைகளில் மாற்றமில்லை

ஊடக உள்ளடக்கம்; அரசாங்கக் கொள்கைகளில் மாற்றமில்லை

1 mins read
edfc2a2e-a67e-4f44-a25a-9f860c2b3c1c
-

ஆண்களுக்கு இடையிலான பாலியல் உறவைக் குற்றச்செயலாகக் கருதும் சட்டப்பிரிவு நீக்கப்படுவதால் ஊடக உள்ளடக்கம் மீதான அரசாங்கக் கொள்கைகளில் மாற்றமிருக்காது என்று தகவல், தொடர்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.

ஒத்த பாலீர்ப்புடைய பெண், ஒத்த பாலீர்ப்புடைய ஆண், இரு பாலீர்ப்புடையோர், திருநர் ஆகியோர் தொடர்பான ஊடக உள்ளடக்கங்கள் வயது வந்தோருக்கு பொருத்தமானதாக இருக்கும்.

சட்டப்பிரிவு 377ஏ நீக்கப்படுவதால் சமூகத்தின் நிலைப்பாடு மாறிவிடும் என அர்த்தமாகாது.

சமூக வழக்கங்கள், பண்பு களுக்கு மதிப்பளிக்கும் வகையில் எங்களுடைய உள்ளடக்க ஒழுங்கு முறை இருக்கும்," என்று அமைச்சு குறிப்பிட்டது.

சென்ற ஞாயிற்றுக் கிழமை தேசிய நாள் பேரணி உரை நிகழ்த்திய பிரதமர் லீ சியன் லூங், சர்ச்சைக்குரிய சட்டப்பிரிவு 377ஏ நீக்கப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து தகவல், தொடர்பு அமைச்சின் அறிக்கை வெளியாகியுள்ளது.

சமூக நடைமுறைகளில் மாற்றத்தைத் தூண்டும் இந்த விவகாரத்தில் ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான திருமணப் பந்தத்தைப் பாதுகாக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

எதிர்காலத்தில் இந்தப் பந்தத்துக்கு சவால் விடுக்கும் வழக்கு களைத் தடுக்கவும் சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படவுள்ளது.