வீவக, யுஆர்ஏ கார் நிறுத்துமிடங்களில் காத்திருப்பு நேரம் 15 நிமிடங்களுக்குக் குறைக்கப்படும்

வீவக, யுஆர்ஏ கார் நிறுத்துமிடங்களில் காத்திருப்பு நேரம் 15 நிமிடங்களுக்குக் குறைக்கப்படும்

1 mins read
c181a52f-a129-43b5-8044-250c7491d64e
-

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) நகர மறுசீரமைப்பு ஆணைய (யூஆர்ஏ) கார் நிறுத்துமிடங்களில் வாகனங்கள் காத்திருக்கும் அவகாசம் 20 நிமிடங்களிலிருந்து 15 நிமிடங்களாகக் குறைக்கப்படும்.

செப்டம்பர் 1ஆம் தேதி இது நடப்புக்கு வரும். கொவிட்-19 கால பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகள் மேலும் தளர்த்தப்பட்டதை அடுத்து இது குறித்து கழகம் நேற்று அறிவித்தது.

பொருள்களை சென்று சேர்க்கவும், மோட்டார் வாகனமோட்டிகள் கார் நிறுத்த இடம் தேடவும், வாடகை வாகன ஓட்டுநர்கள் பயணிகளை ஏற்றவும் இறக்கி விட்டுச் செல்லவும் 15 நிமிடம் போதும் என்று ஆவணங்கள் காட்டுவதாக கழகம் நேற்று கூறியது.

2020 ஏப்ரலுக்கு முன்னர், கார் நிறுத்துமிடங்களில் 10 நிமிடங்கள் மட்டுமே காத்திருக்க முடிந்தது.

கொவிட்-19 கிருமிப் பரவல் காலத்தில், இது 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டது.