'மசெக கொறடா உத்தரவின் கீழ் வாக்களிப்பு'

'மசெக கொறடா உத்தரவின் கீழ் வாக்களிப்பு'

2 mins read
20e26f6d-b069-42c2-bed6-60d65825ba9a
'சட்டப்பிரிவு 377ஏ' நீக்கும் வாக்களிப்பில் கட்சி கொறடா அகற்றப்பட மாட்டாது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

சர்ச்சைக்குரிய அரசியல் சட்டப்பிரிவு 377ஏ நீக்கும் நாடாளுமன்ற விவாதம்

சிங்­கப்­பூரை ஆளும் மக்­கள் செயல் கட்சி, ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­ற­மாக்­கும் பிரிவு 377ஏ சட்­டத்தை நீக்­கு­வ­தில் உறு­தி­யாக உள்­ளது.

நாடா­ளு­மன்­றத்­தில் அச்­சட்­டத்தை ரத்து செய்­வ­தற்­கான வாக்­க­ளிப்பு நடை­பெ­றும்­போது கட்­சி­யி­னர் அனை­வ­ரும் அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளிக்­கும் வகை­யில் கட்சி கொறடா உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­படும் என்று துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங் அறி­வித்­துள்­ளார்.

இந்த உத்­த­ர­வால் மக்­கள் செயல் கட்­சி­யின் நிலைப்­பாட்­டை­யொட்டி மசெ­க­வின் அனைத்து நாட­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வாக்­க­ளிக்க வேண்­டும். கொறடா உத் தரவு கடந்த காலங்­களில் பல­முறை பயன்­படுத்­தப்­பட்­டி­ருக்­கிறது.

சர்ச்­சைக்­கு­ரிய சட்­டப் பிரிவு 377ஏ-ஐ சுட்­டிக்­காட்டி பேசிய திரு லாரன்ஸ் வோங், "இந்­தச் சட்­டம் அம­லாக்­கப்­ப­டாது என்று நீதி­மன்­றம் ஏற்­கெ­னவே கூறி­யுள்­ளது. எங்­க­ளைப் பொறுத்­த­வரை இது பொதுக்­கொள்­கை­யா­கும். இந்­தச் சட்­டத்தை நீக்­கி­னா­லும் சமூ­கத்­தில் இதன் தொடர்­பில் மாற்­றம் ஏற்­ப­டா­மல் இருப்­பதை உறுதி செய்­யும் வகை­யில் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்­றார்.

"நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டப் பிரிவு 377ஏ தொடர்­பான விவா­தத்­தின்­போது கொற­டா உத்தரவை அகற்ற விரும்­ப­வில்லை," என்று அவர் தெரி­வித்­தார்.

பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய நாள் பேரணி உரை­யில் சட்­டப் பிரிவு 377ஏ நீக்­கப்­படும் என்­றும் அதே சம­யத்­தில் ஓர் ஆணுக்­கும் ஒரு பெண்­ணுக்­கும் இடை­யி­லான திரு­மண வரை­ முறையை பாது­காக்­கும் வகை­யில் சட்­டத்­தி­ருத்­தம் கொண்டு வரப்­படும் என்­றும் கூறி­னார்.

உள்­ளூர் ஊட­க­மான சிஎன்­ஏ­வுக்கு அளித்த பேட்­டி­யில் நிதி அமைச்­ச­ரு­மான லாரன்ஸ் வோங் தமது கருத்தை தெரி­வித்திருந் ­தார்.

இதற்கிடையே சிங்­கப்­பூ­ரில் உள்ள 'பென்டகோஸ்டல் அலை யன்ஸ்' என்ற அமைப்பு, 'கரிஸ்­மேட்­டிக்' தேவா­ல­யங்­கள் போன்ற சில அமைப்­பு­கள், நாடாளு ­மன்ற உறுப்­பி­னர்­கள் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்க கட்­சிக் கொற­டா­வைப் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது என்று கூறி உள்ளன. ஆனால் கட்­சி­யில் பொது­வான எண்­ணத்தை உறு­திப்­ப­டுத்­து­வதே கொற­டா­வின் முக்­கிய நோக்­க­மா­கும். ஒழுங்­கு­மு­றை­யு­டன் சுமூ­க­மான நாடா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­ க­ளுக்­கும் அது வழி வகுக்­கிறது என்று சுகா­தார மற்­றும் தொடர்பு, தக­வல் மூத்த அமைச்­சர் டாக்­டர் ஜனில் புதுச்­சேரி தெரி­வித்­தார். இவர்­தான், அர­சாங்­கக் கொற­ட­வாக செயல்­ப­டு­கி­றார்.

இதற்­கி­டையே எதிர்க்­கட்­சி­யான பாட்­டா­ளிக் கட்சி, மக்­கள் செயல் கட்­சி­ தனது கொறடா உத்­த­ரவு பயன்­ப­டுத்­து­வது குறித்து கருத்து எதனையும் தெரிவிக்க மறுத்து விட்டது.