'திருமண வரையறை பாதுகாக்கப்படும்'

'திருமண வரையறை பாதுகாக்கப்படும்'

1 mins read
f1b72412-0bb4-4b9e-b373-b132b5cea87f
அமைச்சர் எட்வின் டோங். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு -

அர­சாங்­கம், தற்­போ­துள்ள திரு­மண வரை­ய­றை­யைக் கட்­டிக்­காக்க உத்­தேச அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை கொண்டு வரும் என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் கூறி­னார்.

துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங், உள்­ளூர் ஊட­க­மான சிஎன்­ஏ­வுக்கு அளித்த நேர்­கா­ண­லில் திரு எட்­வின் டோங்­கும் பங்­கேற்று தமது கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டார்.

இந்த உத்­தேச பாது­காப்பு சட்­டத் திருத்­தம், தற்­போ­தைய திரு­மண வரை­ய­றையை பொது வீட­மைப்பு, பள்ளி பாடத்­திட்­டங்­கள் உள்­ளிட்ட சட்­டப்­பி­ரி­வு­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­படும் என்­றார் அவர்.

சில தேவா­ல­யங்­கள் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­படி, அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் ஏன் திரு­மண வரை­யறை உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என கேட்­கப்­பட்­ட­தற்கு "பொருத்­த­மாக இருக்­காது" என்­பதே முக்­கிய கார­ணம் என்­றார் திரு டோங்.

நமது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தில் உள்ள அடிப்­படை உரி­மை­கள், வாழ்க்கை மற்­றும் தனிப்­பட்ட சுதந்­திர உரி­மை­கள் ஆகி­ய­வற்­றுக்­கான உரி­மை­க­ளைப் போலவே திரு­ம­ண­பந்­தம் என்ற நிலை­யை­யும் உயர்த்­தும் என்று அவர் கூறி­னார். இந்த நட­வ­டிக்கை சிலரை திருப்­திப்­ப­டுத்தி னாலும் மற்ற பிரி­வி­னர் கலக்க மடை­ய­லாம் என்று அமைச்­சர் எச்­ச­ரித்­தார்.

இது சமூ­கத்­திற்கு நல்­ல­தல்ல என்­றும் சட்ட இரண்­டாம் அமைச்­சருமான திரு எட்­வின் டோங் மேலும் தெரி­வித்­தார்.