சிங்கப்பூரர்களின் பெருங்கவலைகள்; அதிகரிக்கும் செலவு, உடல் நலப் பிரச்சினை

சிங்கப்பூரர்களின் பெருங்கவலைகள்; அதிகரிக்கும் செலவு, உடல் நலப் பிரச்சினை

2 mins read
2ae01380-1de5-4947-977a-3eec9db8fbc6
-

இவ்­வாண்­டின் தேசிய தினப் பேர­ணி­யைத் தொடர்ந்து அதி­க­ரித்து வரும் வாழ்க்­கைச் செல­வு­களும் உடல் நலப் பிரச்­சி­னை­களும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் பெருங்­க­வ­லை­க­ளாக இருப்­பது ஆய்வு ஒன்று மூலம் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

சென்ற ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த தேசிய தினப் பேரணி உரைக்­குப் பிறகு 600 பேரி­டம் அது பற்றி கருத்­த­றி­யப்­பட்­டது.

மிலி­யுவ் இன்­சைட் எனும் அந்த ஆய்­வில் சர்ச்­சைக்­கு­ரிய சட்­டப்­பி­ரிவு 377ஏ நீக்­கு­வது குறித்­தும் கருத்து கேட்­கப்­பட்­டது.

பெரும்­பா­லோர் அந்த விவ­கா­ரத்­தில் நடு­நி­லையை வகிக்க விரும்­பு­கின்­ற­னர். அந்­தச் சட்­டம் நீக்­கப்­ப­டு­வதை யாரும் எதிர்க்­க­வில்லை. அதற்கு ஆத­ர­வான கருத்­தையே பல­ரும் வெளிப்­ப­டுத்தி னர்.

பிர­த­மர் லீ சியன் லூங் தனது வரு­டாந்­திர தேசிய தினப் பேரணி உரை­யில் ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­றச்­செ­ய­லா­கக் கரு­தும் சட்­டப் பிரிவு உட்­பட பல விவ­கா­ரங்­கள் பற்றி பேசி­னார்.

16 அல்­லது அதற்­கும் மேற்­பட்ட வய­தி­ன­ரி­டம் 12 முக்­கிய பிரச்­சி­னை­களை சுட்­டிக்­காட்டி இதில் எது உங்­க­ளு­டைய முக்­கிய கவ­லை­யாக இருக்­கிறது என்று பங்­கேற்­பா­ளர்­க­ளி­டம் கேட்­கப்­பட்­டது.

ரஷ்யா-உக்­ரேன் பதற்­றம், கொவிட்-19 உரு­மா­றிய கிரு­மி­கள், பொரு­ளி­யல் மந்­த­நிலை, பரு­வ­நிலை மாற்­றம் உட்­பட 12 பிரச்­சி­னை­கள் பற்றி அவர்­க­ளி­டம் கருத்­த­றி­யப்­பட்­டது.

அப்­போது பத்­தில் ஒன்­பது பேர் அதி­க­ரிக்­கும் வாழ்க்­கைச் செலவு தங்­க­ளு­டைய முக்­கிய கவ­லை­யாக இருப்­ப­தா­கக் கூறி­னர்.

இதற்கு அடுத்­த­தாக ஏறக்­கு­றைய பாதி பேர் பொரு­ளி­யல் மந்­த­நிலை கவ­லை­ய­ளிப்­ப­தாக தெரி­வித்­துள்­ள­னர்.

நிலைத்­தன்மை மற்­றும் உடல் நலப் பிரச்­சி­னை­களும் பங்­கேற்­ற­வர்­க­ளின் கவ­லை­க­ளாக உள்­ளன.

பத்­தில் நான்கு பேர் பரு­வ­நிலை மாற்­றம் குறித்து கவ­லைப்­ப­டு­கின்­ற­னர்.

பத்­தில் மூவ­ருக்கு மேல் புதிய உரு­மா­றிய கொவிட்-19 கிருமி கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக் கிறது.

இரு ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­ற­மாக்­கும் சட்­டப்­பி­ரிவு 377ஏ நீக்­கப்­ப­டு­வதை பத்­தில் இரண்டு பேர் மட்­டுமே விரும்­ப­வில்லை.

இந்­தச் சட்­டம் நீக்­கப்­படும் என்று பிர­த­மர் லீ தமது தேசிய தினப் பேர­ணி­யில் அறி­வித்­த­போதே ஓர் ஆணுக்­கும் ஒரு பெண்­ணுக்­கும் இடை­யி­லான திரு­மண உறவை பாது­காக்க சட்­டத்­தி­ருத்­தம் கொண்டு வரப்­படும் என்று கூறி­னார். இதற்கு எதி­ராக நீதி­மன்­றத்­தில் சவால் விடுக்­கும் வழக்கு களைத் தடுக்­கும் வகை­யில் அந்த சட்­டத் திருத்­தம் இருக்­கும் என்­றார் அவர்.

'சட்­டப்­பி­ரிவு 377ஏ' நீக்­கு­வது எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்று கேட்­கப்­பட்­ட­தற்கு பாதிக்­கும் சற்­றுக் குறை­வா­ன­வர்­கள் ஆட்­சே­பம் இல்லை என்று கூறி­னர். 34 விழுக்­காட்­டி­னர் இந்த நட­வ­டிக்­கையை ஆத­ரிப்­ப­தா­க­வும் 20 விழுக்­காட்­டி­னர் ஆத­ரிக்­க­வில்லை என்­றும் கூறி­னர்.

இதற்­கி­டையே சட்­டப்­பி­ரிவு 377Aஐ நீக்­கும் நட­வ­டிக்கை ஒரு வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்­கது என்று கூறிய 'மிலியு இன்­சைட்' ஆய்­வின் தலைமை நிர்­வா­கி­யான ஜெரால்ட் ஆங், ஆய்­வின் முடி­வு­கள் அம் முடிவை ஆத­ரிப்­ப­தாக உள்­ளது என்­றார்.