ஊடக உள்ளடக்கம்; கொள்கைகள் மாறாது

ஊடக உள்ளடக்கம்; கொள்கைகள் மாறாது

2 mins read
a5395cc5-20d8-4be3-a41c-c75a710c4727
-

ஆண்­க­ளுக்கு இடை­யி­லான பாலி­யல் உற­வைக் குற்­றச்­செ­ய­லா­கக் கரு­தும் சட்­டப்­பி­ரிவு நீக்­கப்­படுவதால் ஊடக உள்­ள­டக்­கம் மீதான அர­சாங்­கக் கொள்­கை­களில் மாற்ற­மி­ருக்­காது என்று தொடர்பு, தகவல் அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

ஒத்த பாலீர்ப்­பு­டைய பெண், ஒத்த பாலீர்ப்­பு­டைய ஆண், இரு பாலீர்ப்­பு­டை­யோர், திரு­நர் ஆகியோர் தொடர்­பான ஊடக உள்­ள­டக்­கங்­கள் வயது வந்­தோ­ருக்கு பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்.

சட்­டப்­பி­ரிவு 377ஏ நீக்­கப்­ப­டு ­வ­தால் சமூ­கத்­தின் நிலைப்­பாடு மாறி­வி­டும் என அர்த்­த­மா­காது.

சமூக வழக்­கங்­கள், பண்­பு களுக்கு மதிப்­ப­ளிக்­கும் வகை­யில் எங்­க­ளு­டைய உள்­ள­டக்க ஒழுங்­கு­ முறை இருக்­கும்," என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

சென்ற ஞாயிற்­றுக்கிழமை தேசிய தினப் பேரணி உரை நிகழ்த்­திய பிர­த­மர் லீ சியன் லூங், சர்ச்­சைக்­கு­ரிய சட்­டப்­பி­ரிவு 377ஏ நீக்­கப்­படும் என்று அறி­வித்­தார்.

இதை­ய­டுத்து தக­வல், தொடர்பு அமைச்­சின் அறிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.

சமூக நடை­மு­றை­களில் மாற்றத்­தைத் தூண்­டும் இந்த விவ­கா­ரத்­தில் ஓர் ஆணுக்­கும் ஒரு பெண்­ணுக்­கும் இடை­யி­லான திரு­ம­ணப் பந்­தத்­தைப் பாது­காக்க அர­சாங்­கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுக்க முடிவு செய்­துள்­ளது.

எதிர்­கா­லத்­தில் இந்­த பந்­தத்­துக்கு சவால் விடுக்­கும் வழக்­கு ­க­ளைத் தடுக்­க­வும் சட்­டத் திருத்­தம் விரை­வில் கொண்டு வரப்­ப­ட­வுள்­ளது.

இளம் வாச­கர்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில் ஊடக உள்­ள­டக்­கங்­கள் ஒழுங்­கு­ப­டுத்­தப்­படும். அதே சம­யத்­தில் தக­வல்­களை அறிந்­து­கொள்ள வயது வந்­த­வர்­க­ளுக்­கும் பொருத்­த­மான உள்­ள­டக்­கங்­கள் அனு­ம­திக்­கப்­படும் என்று நேற்­றைய அறிக்­கை­யில் அமைச்சு தெரி­வித்­தது

அதி­க­மா­ன­வர்­களை ஈர்த்து விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும் உள்­ள­டக்­கங்­களில் கடு­மை­யான விதி­மு­றை­க­ளின்கீழ் அனு­ம­திக்­கப் ­ப­டு­கிறது என்ற தக­வல் தொடர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் தெரி­வித்­தது.

ஒரே பாலினத்தைச் சேர்ந்­த­வர்­கள் முத்­த­மி­டும் காட்சி இடம்­பெற்ற டிஸ்னி-பிக்­சர் கேலிச்­சித்­திர 'லைட்­யி­யர்' (Lightyear) திரைப்­ப­டத்­துக்கு பல நாடு­களில் தடை விதிக்­கப்­பட்­டா­லும் கடந்த ஜூன் மாதம் அந்த திரைப்­ப­டம் 'என்சி16' மதிப்­பீட்­டின் கீழ் இங்கு திரை­யிட அனு­ ம­திக்­கப்­பட்­டது.

அந்­தப் படத்­தில் ஒரு பெண் கதா­பாத்­தி­ரம் மற்­றொரு பெண்­ணு­டன் சேர்ந்து குடும்­பம் தொடங்­கு­வது போல­வும் முத்­த­மி­டு­வது போல­வும் காட்­சி­கள் இடம்பெற்று இருந்தன. ஓரி­னச்­சேர்க்கை காட்சி இடம்­பெற்ற முதல் வணி­க­ரீ­தி­யி­லான குழந்­தை­க­ளுக்­கான கேலிச்­சித்­திர திரைப்­ப­டம் இது. இந்தத் திரைப்­ப­டம் 'என்சி16' மதிப்­பீட்­டின் கீழ் அனு­ம­திக்­கப்­பட்­டது என்று ஆணை­யம் மேலும் கூறி­யது.