11 பள்ளிச்சிறுவர்களைப் பாலியல் வதை செய்த ‘ஆபத்தான’ நபருக்கு 42 ஆண்டுகள் சிறை, 24 பிரம்படிகள்

ஏழு ஆண்­டு­களில் 11 சிறு­வர்­களைத் திட்­ட­மிட்டு பாலி­யல் உற­வுக்கு ஆயுத்­தப்­ப­டுத்தி அவர்களைப் பாலி­யல் துன்புறுத்தல் செய்த ஆட­வ­ருக்கு 42 ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் 24 பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்டுள்ளது.

கற்­றல் உத­வி­யா­ள­ராக இருந்த அந்த ஆட­வர் பள்­ளிக்­குப் பிந்­திய பரா­ம­ரிப்பு நிலை­யத்­தில் மாண­வர்­ க­ளைச் சந்­தித்­தார்.

சிறு­வர் மீது பாலி­யல் ஈர்ப்பு, அவர்­களைப் பாலி­யல் துன்புறுத்தல் செய்­தல் தொடர்­பாக நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­பட்ட மிக­வும் மோச­மான வழக்­கு­களில் இது­வும் ஒன்று என அர­சாங்­கத் தரப்பு வழக்­க­றி­ஞர்­கள் கூறி­னர்.

சிறு­வர் மீது பாலி­யல் ஈர்ப்­புள்ள 'ஆபத்­தா­ன­வர்' என்று அவர்­கள் குற்­ற­வா­ளியை வரு­ணித்­த­னர்.

ஒன்­ப­தி­லி­ருந்து 11 வயது வரை இருந்த நான்கு சிறு­வர்­களிடம். பாலி­யல் உறுப்­பின் ஊடு­ரு­வல் வழி மோச­மான பாலி­யல் வன்­மு­றை­யில் ஈடு­பட்ட ஆறு குற்­றச்­சாட்­டு­களை ஆட­வர் ஒப்­புக்­கொண்­டார்.

மோச­மான பாலி­யல் வன்­கொ­டுமை, பாலி­யல் உறுப்­பின் ஊடு­ரு­வல் வழி மோச­மான பாலி­யல் வன்­முறை, சிறு­வ­ரின் பாலி­யல் உறுப்­பு­களை ஊடு­ரு­வி­யது உள்­ளிட்ட 54 குற்­றச்­சாட்­டு­கள் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது கருத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டன.

சிறு­வர்­க­ளைக் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை, பரா­ம­ரிப்பு நிலை­யத்­தி­லும் தனது இல்­லத்­தி­லும் அவர் பாலி­யல் ரீதியாக துன்புறுத்தினார்.

சிறு­வர்­க­ளின் பெயர்­வி­வ­ரங்­களை மறைக்­கும் பொருட்டு அவ­ரது அடை­யா­ளமும் மறைக்­கப்­பட்­டது.

ஆஸ்­தி­ரே­லி­யக் காவல்­துறை அளித்த துப்­பின்­பே­ரில் ஆட­வர் பிடி­பட்­டார். சிறு­வர்­க­ளின் ஆபாசப் படங்­க­ளைத் தர­வி­றக்­குவதற்கான இணை­யத்­த­ளங்­க­ளைக் கொண்ட 17 மின்­னஞ்­சல்­கள் அவ­ரது கணக்­கில் இருந்­தது என்று ஆஸ்­தி­ரே­லி­யக் காவல்­துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!