பாண்டான் ஆற்றில் சடலம்: ‘சாக்கு என்று நினைத்தோம்’

பாண்­டான் ஆற்­றில் நேற்று காலை கயாக் பட­கு­க­ளைச் செலுத்­தச் சென்ற நண்­பர் குழு­வி­னர், ஆற்­றில் 60 வயது ஆட­வ­ரின் சட­லத்­தைக் கண்­ட­னர்.

காவல்­து­றைக் கடற் படையை அவர்­கள் உத­விக்கு அழைத்­ததை அடுத்து, சட­லம் மீட்­கப்­பட்­டது.

47 வயது திரு ரிச் லியா­வும் அவ­ரது நண்­பர்­களும் வெஸ்ட் கோஸ்ட் முதல் புலாவ் ஹந்து வரை கயாக் படகு களைச் செலுத்­தத் திட்­ட­மிட்­டி­ருந்­த­னர். ஆனால் திட்­டத்தை மாற்றி பாண்­டான் ஆற்­றில் பட­கு­க­ளைச் செலுத்­தி­னர்.

ஆற்­றில் சென்­ற­போது, சாக்கு போன்ற ஒன்று மிதந்து சென்­ற­தைக் கண்­ட­தாக திரு லியாவ் சொன்­னார். உற்­றுப் பார்த்­த­போது, ஆட­வ­ரின் முது­கில் பச்சை குத்தி இருந்­த­தை­யும் அவ­ரது நரை முடி­யை­யும் பார்த்­த­தா­க­வும் திரு லியாவ் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் கூறி­னார்.

தங்கள் உதவி கோரி காலை 9.57 மணிக்­குத் அழைப்பு வந்­த­தாக காவல்­துறை தெரி­வித்­தது.

60 வயது ஆட­வ­ரின் சட­லம் மீட்­கப்­பட்­ட­தாக அது கூறி­யது.

முதற்­கட்ட விசா­ர­ணை­யின் அடிப்­ப­டை­யில் குற்­றம் நிகழ்ந்­தி­ருக்­கும் என்ற சந்­தே­கம் இல்லை என்­றும் காவல்­துறை குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை, நேற்று காலை 10.15 மணிக்கு உதவி கோரி அழைப்பு வந்­த­தா­கத் தெரிவித்தது.

தனது அதி­கா­ரி­கள் சட­லத்தை மீட்டு, அதைக் கரை சேர்க்க உத­வி­ய­தா­க­வும் அது கூறி­யது.

ஞாயிற்­றுக்­கி­ழமை ஆற்­றில் விழுந்த ஆட­வ­ரின் சட­லம்­தான் மீட்­கப்­பட்­ட­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்­தித்­தாள் அறி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!