மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு அடித்தளம்

மின்னிலக்கப் பொருளியல் வளர்ச்சிக்கு அடித்தளம்

2 mins read
c967a446-ca6f-43ed-94f5-d23a78880d48
சிங்கப்பூர் மின்னிலக்கப் பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு நேற்று உரையாற்றிய தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ. படம்: பிஸ்னஸ் சைனா -

உள்கட்டமைப்பு வசதிகளை அமைப்பது, ஆய்வு, மேம்பாட்டில் முதலீடு செய்வது

சிங்­கப்­பூர் அதன் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் வளர்ச்­சிக்கு ஆத­ர­வு அளிக்க அடித்­த­ளம் அமைத்து வரு­கிறது. புதிய தொழில்­நுட்­பங்­கள் உரு­வெ­டுத்து வரும் வேளை­யில், அவற்­றில் மறைந்­தி­ருக்­கும் அபா­யங்­களில் இருந்து பய­னா­ளர்­க­ளைப் பாது­காக்­க­வும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கிறது.

'மெட்­ட­வர்ஸ்', 'வெப் 3.0' போன்ற புதிய தொழில்­நுட்­பங்­கள் உரு­வெடுத்து வரும் நிலை­யில், கூடு­தல் உள்­கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது, ஆய்வு, மேம்­பாட்­டில் முத­லீடு செய்­வது, திற­னா­ளர்­களை வளர்ப்­பது உள்­ளிட்­டவை இந்த நட­வ­டிக்­கை­களில் அடங்­கும்.

சிங்­கப்­பூர் மின்­னி­லக்­கப் பொரு­ளி­யல் கருத்­த­ரங்­கில் கலந்­து­கொண்டு நேற்று உரை­யாற்­றிய தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ இத­னைத் தெரி­வித்­தார்.

சொல்­லப் போனால், புதிய தொழில்­நுட்­பங்­களில் முத­லீடு செய்­யப்­பட்டு வரு­கின்­றன. மின்­னி­லக்க (கிரிப்டோ) நாண­யம், 'வெப் 3.0' தொடர்­பில் தொழில் தொடங்­கிய நிறு­வ­னங்­களில் முத­லீட்­டா­ளர்­கள் கடந்த ஆண்டு US$33 பில்­லி­ய­னுக்­கும் (S$46 பி.) அதி­க­மாக முத­லீடு செய்­த­னர்.

இவ்­வாண்­டின் முதல் ஐந்து மாதங்­களில் மட்­டும், 'மெட்­ட­வர்ஸ்' தொழில்­நுட்­பத்­தி­லும் உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளி­லும் US$120 பில்­லி­ய­னுக்கு மேல் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இத்­த­கைய சூழ­லில்­தான் பொரு­ளி­யல் ரீதி­யாக சிங்­கப்­பூ­ரின் போட்­டித்­தன்­மையை அதி­க­ரிக்க அர­சாங்­கம் உத­வு­கிறது. அதே வேளை­யில், இணை­யப் பாது­காப்­பை­யும் பய­னா­ளர் தர­வுப் பாது­காப்­பை­யும் அது உறுதி செய்­வ­தாக திரு­மதி டியோ சொன்­னார்.

தொடர்பு, தக­வல் மூத்த துணை அமைச்­சர் டான் கியட் ஹாவ்­வும் கருத்­த­ரங்­கில் பேசி­னார்.

"இன்­றைய நில­வ­ரப்­படி, மெட்­ட­வர்ஸ் தொழில்­நுட்­பம் மூலம் எழக்­கூ­டிய பிரச்­சி­னை­க­ளைச் சரி­செய்­யக்­கூ­டிய வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்ட சட்ட திட்­டங்­களை எந்­த­வோர் அர­சாங்­க­மும் நிறை­வேற்­ற­வில்லை.

"எனவே சிங்­கப்­பூ­ரைப் பொறுத்­த­மட்­டில், விதி­மு­றை­க­ளுக்­கும் புத்­தாக்­கத்­திற்­கும் இடையே சம­நிலை வகுப்­ப­தில் நாம் கவ­ன­மாக இருக்க வேண்­டும்," என்று திரு டான் விவ­ரித்­தார்.

தனி­ந­பர் தர­வுப் பாது­காப்­பில் கவ­னம் செலுத்த மென்­பொ­ருள்­க­ளைச் சோதிக்­கும் தளங்­கள் ஏற்­படுத்­தித் தரப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சொன்­னார்.

விதி­மு­றை­களும் இணை­யப் பாது­காப்­பும் ஒரு­பு­ற­மி­ருக்க, உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை அமைப்­பதும் முக்­கி­யம் என்று திரு­மதி டியோ கூறி­னார். ஏனெ­னில், புதிய தொழில்­நுட்­பங்­க­ளுக்கு 5ஜி தொடர்பு தேவைப்­ப­டு­கிறது.

ஆய்வு, மேம்­பாட்­டில் சிங்­கப்­பூர் தொடர்ந்து முத­லீடு செய்­யும். ஐந்து ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக ஆய்வு, புத்­தாக்­கம், வணி­கம் ஆகி­ய­வற்றில் அது ஏற்­கெ­னவே $25 பில்லியன் முத­லீடு செய்­துள்­ளது.

முக்­கி­ய­மாக, இந்த அம்­சங்­களில் திற­னா­ளர்­களை அது உரு­வாக்க வேண்­டும்.

"கூடு­த­லான சிங்­கப்­பூ­ரர்­கள் மின்­னி­லக்­கத் தளங்­களில் ஏற்­படுத்­தப்­படும் வாய்ப்­பு­க­ளைப் பெற, எங்­க­ளது திறன் வளர்ச்­சித் திட்­டங்­கள் மேம்­ப­டுத்­தப்­படும்," என்று திரு­மதி டியோ சொன்­னார்.

தொழில்­நுட்ப ஊழி­ய­ரணி காலத்­திற்கு ஏற்­பு­டை­ய­தாக இருப்­பதை உறுதி செய்ய, தொழில்­து­றை­யு­டன் இணைந்து அர­சாங்­கம் அணுக்­க­மா­கப் பணி­யாற்ற வேண்­டும் என்­பதை அவர் சுட்­டி­னார்.