தொழில்நுட்பப் பயனர் கணக்கு கண்காணிப்பு: சிங்கப்பூருக்கு 6வது இடம்

தொழில்நுட்பப் பயனர் கணக்கு கண்காணிப்பு: சிங்கப்பூருக்கு 6வது இடம்

1 mins read
cea7f030-4de5-40f7-8285-964cfb6c54e8
-

ஆப்­பிள், கூகல், மெட்டா, மைக்­ரோ­சா­ஃப்ட் ஆகிய நான்கு தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளின் பய­னர் கணக்­கு­கள் கண்­கா­ணிக்­கப்­ப­டு­வ­தைப் பொறுத்­த­வரை உல­கில் சிங்­கப்­பூர் ஆறா­வது இடத்­தைப் பிடித்­துள்­ளது.

நெதர்­லாந்­தைச் சேர்ந்த 'சர்­ஃப்­ஷார்க்' எனும் இணை­யப் பாது­காப்பு நிறு­வ­னம் நடத்­திய ஆய்வு ஒன்­றில் இது தெரி­ய­வந்­துள்­ளது. 2013ல் இருந்து எட்டு ஆண்டு காலத்­தில் தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளின் வெளிப்­ப­டைத்­தன்மை அறிக்­கை­களை இந்த ஆய்வு ஆராய்ந்­தது.

நான்கு தொழில்­நுட்ப நிறு­வ­னங்­களில், 100,000 குடி­யி­ருப்­பா­ளர்­களில் கோரப்­படும் மொத்த பய­னர் கணக்கு எண்­ணிக்கையின் அடிப்­ப­டை­யில் இத்தர­வ­ரிசை தீர்­மா­னிக்­கப்­ப­டு­கிறது.

தர­வ­ரி­சை­யில் மால்டா (1,128 கணக்­கு­கள்) முத­லி­டம் பிடித்துள்ளது.

அதற்கு அடுத்த நிலை­களில் லக்ஸெம்­பர்க், அமெ­ரிக்கா, ஜெர்­மனி, பிரிட்­டன் ஆகிய நாடு­கள் இடம்­பெறு­கின்­றன. 6வது இடத்­தைப் பிடித்­த சிங்­கப்­பூ­ரில், 100,000 பேரில் 452 பேரின் கணக்குகள் கோரப்­பட்­டன.