'குறைவான கொவிட்-19 எண்ணிக்கை நம்பிக்கையளிக்கும் மற்றோர் அறிகுறி'

'குறைவான கொவிட்-19 எண்ணிக்கை நம்பிக்கையளிக்கும் மற்றோர் அறிகுறி'

1 mins read
683b2e06-3979-4826-8d8c-b51f263fba8e
-

சிங்­கப்­பூ­ரில் நேற்று புதி­தாக 3,406 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

கொவிட்-19 சிகிச்­சைக்­காக 359 பேர் மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

இதற்கு முந்­திய வாரத்­து­டன் ஒப்­பு­நோக்க, இவ்­விரு எண்­ணிக்­கை­யும் குறை­வா­கும். கடந்த வாரம் செவ்­வாய்க்­கி­ழமை 4,909 பேருக்குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மருத்­து­வ­ம­னை­களில் 524 பேர் சிகிச்சை பெற்று வந்­த­னர்.

இது­கு­றித்து தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் நேற்று வெளி­யிட்ட பதி­வில், "ஒவ்­வோர் அலை­யும் கடந்­து­செல்­லும் வேளை­யில், நமது சமு­தா­யத்­தின் மீள்­தி­றன் அதி­க­ரித்து வரு­வ­தைக் காட்­டும் மற்றொரு நம்­பிக்­கை­ய­ளிக்­கும் அறி­கு­றி­யாக இது உள்­ளது," என்று குறிப்­பிட்­டார்.

வார­யி­று­தி­க­ளுக்­குப் பிறகு பொது­வாக செவ்­வாய்க்­கி­ழ­மை­களில்­தான் கொவிட்-19 தொற்று அதி­க­மாக பதி­வா­கும். ஆனால், நேற்று அது அப்­படி பதி­வா­க­வில்லை.

இந்­நி­லை­யில், இனி செல்­வதற்கான பாதை குறித்து கொவிட்-19 அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­குழு மேல்­வி­வ­ரங்­களை அறி­விக்­கும் என்று அமைச்­சர் ஓங் தெரி­வித்­தார்.

"இவ்­வே­ளை­யில், தேவை­யான முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுத்து, தொடர்ந்து சமூ­கப் பொறுப்­பு­டன் நடந்­து­கொள்­ளுங்­கள்," என்று அவர் அறி­வு­றுத்­தி­னார்.

முகக்­க­வ­சம் அணி­வது விரை­வில் பொதுப் போக்­கு­வ­ரத்­தி­லும் மருத்­து­வ­ம­னை­கள், மருந்­த­கங்­கள் போன்ற சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளி­லும் கட்­டா­ய­மாக இருக்­கும் என்று பிர­த­மர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரை­யில் அறி­வித்து இருந்­தார்.

தற்­போது வெளிப்­பு­றங்­களில் முகக்­க­வ­சம் அணி­வது கட்­டா­ய­மில்லை.

ஆனால், கடைத்­தொகுதி­கள் போன்ற உட்­பு­றங்­களில் அதை அணி­வது கட்­டா­ய­மாக இருந்து வரு­கிறது.