'பல்வேறு கருத்துகளால் முடங்கிப் போகக்கூடாது'

'பல்வேறு கருத்துகளால் முடங்கிப் போகக்கூடாது'

2 mins read
eb1be6e3-ff55-4b6c-81cb-bcd4a92b38ee
புத்தக வெளியீட்டு விழாவில் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், திரு ரவி மேனன். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சட்ட திட்­டங்­களை வரை­வ­தற்­கும் அவற்றைச் செயல்­ப­டுத்­து­வ­தற்­கும் பல்­வேறு கருத்­து­கள் இருப்­பது மெரு­கூட்­டும். அதே வேளை­யில் பல­த­ரப்­பட்ட கருத்­து­கள் தலை­தூக்­கு­ம்போது முடங்­கிப் போகும் நிலை உரு­வா­வதை சிங்­கப்­பூர் தவிர்க்­க­வேண்­டும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் கூறி­யுள்­ளார்.

பல்­வேறு கருத்­து­களை வர­வேற்று பல கண்­ணோட்­டங்­கள் குறித்து விவா­திக்க சிங்­கப்­பூர் விரும்­பி­னா­லும் முன்­னோக்கி சிந்­தித்து தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் துணிச்­சல் உள்ள தலை­வர்­களும் அதற்கு வேண்­டும் என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்

"ஒரு முடி­வெ­டுத்­த­தும் ஒன்­று­பட்டு செயல்­ப­டு­வ­து­டன் முடி­விலிருந்து மாறா­மல் இயங்­க­வேண்­டும். அனை­வ­ரும் பங்­காற்­ற­வேண்­டும், நம்மை மேம்­ப­டுத்­திக்­கொள்­ள­லாமா என்­பதை ஆராய அவ்­வப்­போது நாம் எடுத்த முடி­வு­களை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும்," என்று பொரு­ளி­யல் கொள்­கை­களுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங் கூறி­னார்.

'தி சிங்­கப்­பூர் சிந்­த­சிஸ்: இனோ­வே­ஷன், இன்க்­ளூ­ஷன், இன்ஸ்­பிரே­ஷன்' எனும் புத்­த­கத்­தின் வெளி­யீட்டு விழா­வில் கலந்­து­கொண்­ட­போது திரு ஹெங் பேசி­னார். சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் ரவி மேனன் சென்ற ஆண்டு ஜூலை மாதம் வழங்­கிய நான்கு விரி­வுரை­கள் இப்­புத்­த­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளன.

கொள்கை ஆய்­வுக் கழ­கத்­தின் ஒன்­ப­தா­வது எஸ். ஆர் நாதன் கல்விமான் பொறுப்­பில் திரு மேனன் அந்த விரி­வு­ரை­களை வழங்­கி­னார். சிங்­கப்­பூர் நாணய ஆணை­யத்­தில் உயர் பொறுப்­பில் இருந்­தா­லும்­கூட அவர் தனது விரி­வு­ரை­களில் வெளிப்­ப­டை­யா­கக் கருத்­து­களை முன்­வைத்­தது சில­ருக்கு ஆச்­ச­ரி­யம் தந்­த­தைத் திரு ஹெங் சுட்­டி­னார்.

செல்­வந்­தர்­க­ளுக்­கான வரியை அதி­க­ரிப்­பது, குறைந்­த­பட்ச சம்­பள முறையை செயல்­ப­டுத்­து­வது குறித்து ஆராய்­வது உள்ளிட்ட பரிந்­து­ரை­களைத் திரு மேனன் தனது விரி­வு­ரை­களில் முன்­வைத்­தார்.