சிறுமிக்கு மூளைக் காயம் ஏற்படுத்தியவருக்குச் சிறை

சிறுமிக்கு மூளைக் காயம் ஏற்படுத்தியவருக்குச் சிறை

1 mins read
51c7b531-f750-46f4-ad26-1d2a89b60e76
-

சாலையைக் கடக்கும்போது ஒன்பது வயது சிறுமியை மோதி அவருக்கு மோசமான மூளைக் காயம் ஏற்படுத்திய ஓட்டுநருக்கு ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கவனமின்றி வாகனத்தை ஓட்டி மோசமான காயம் விளைவித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு குற்றச்சாட்டை

46 வயது ஷேக் சலீம் சாயீத் ஒப்புக்கொண்டார்.

சிங்கப்பூரரான அவருக்குத் தண்டனை விதிக்கும்போது மேலும் மூன்று குற்றச்சாட்டுகள் கருத்தில்கொள்ளப்பட்டன. 'பிடோக் மால்' கடைத்தொகுதியிலிருந்து சிறுமி தனது தாயுடன் சாலையைக் கடந்தபோது ஷேக் சலீம் இருவரையும் மோதினார்.