தங்ளின் நிலையத்தின் புதிய தலைவராகத் திரு சொங் ஸீ செங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்குப் போட்டியாக இருந்த திரு ஹென்ரி லிங் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை.
நேற்று முன்தினம் நடந்த அந்தத் தேர்தலை நடத்தியது சரியல்ல என தான் எண்ணியதால் திரு ஹென்ரி லிங் போட்டியிடவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிகிறது.
இதற்கு முன்பு தலைவர் பதவியை வகித்தவர் திரு இயோ என் லாய். தான் மேற்கொண்ட பல்கலைக் கழகப் பட்டக் கல்வியின் நம்பகத்தன்மை தொடர்பில் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து திரு இயோ சென்ற மாதம் பதவி விலகினார்.
கடந்த மே மாதம் 30ஆம் தேதியன்று நடைபெற்ற முந்தைய தேர்தலில் போட்டியிட்டு திரு இயோ வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஒரே நபர் திரு ஹென்ரி லிங்.
தற்போதைய தலைவரான திரு சொங், திரு இயோ அந்தப் பதவியை வகித்தபோது நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்தார்.

