கொவிட்-19 பணிக்குழு தொடர்ந்து செயல்படும்

கொவிட்-19 பணிக்குழு தொடர்ந்து செயல்படும்

1 mins read
37f7d86f-084c-494f-92f2-8b10336c323a
ஈராண்டுகளுக்கு பிறகு இன்று அமைச்சுகள் நிலை பணிக்குழு நேரடியாக செய்தியாளர் சந்திப்பை நடத்தியது (படம்: தகவல் தொடர்பு அமைச்சு) -

சிங்கப்பூரில் கொவிட்-19 நிலைமை மேம்பட்டிருந்தாலும், கொவிட்-19 அமைச்சுகள்நிலை பணிக்குழு தொடர்ந்து செயல்படும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

கொரோனா கிருமி எப்படி உருமாறுகிறது, அதன் எதிர்கால திரிபுகள் ஆகியவற்றை குறித்து போதிய தகவல்கள் இல்லாத நிலையில் பணிக்குழு தொடர்ந்து நீடிக்கும் என்றார் திரு வோங்.

"புதிய கிருமி திரிபு மிதமாக இருக்கலாம் அல்லது இன்னும் ஆபத்தாக இருக்கலாம். இதனால் பணிக்குழு அதன் பணியைத் தொடரும். நாங்கள் நிலைமையை அணுக்கமாக கண்காணித்துவருகிறோம்," என்றார் திரு வோங்.

கொவிட்-19 எதிரான அரசாங்கத்தின் போராட்டத்தை ஒருங்கிணைக்க பணிக்குழு ஜனவரி 2020ல் அமைக்கப்பட்டது.