கெப்பல் பட்டறை விபத்து: வெளிநாட்டு ஊழியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

கெப்பல் பட்டறை விபத்து: வெளிநாட்டு ஊழியரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

1 mins read
6fb0f1c2-862f-4fc4-87a6-ccbaa35bdf7d
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கெப்பல் பட்டறையில் பாரந்­தூக்கி நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ருந்த பகுதி இடி விழுந்ததை தொடர்ந்து பங்ளாதே‌ஷ் ஊழியர் ஒருவர் கடலுக்குள் விழுந்தார். அவருடைய சடலம் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டது.

மாண்டவரின் குடும்பத்துக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், விசாரணை தொடர்பில் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் கெப்பல் பட்டறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சம்பவ இடத்துக்கு அருகே கடலில் மிதந்துகொண்டிருக்கும் சடலத்தை மீட்க குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுவருகின்றனர்.

திங்கள்கிழமை (ஆகஸ்ட் 22) காலை பாரந்தூக்கி நிறுத்திவைக்கப்பட்டிருந்த பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பங்­க­ளா­தே‌ஷைச் சேர்ந்த இருவர், சீனாவைச் சேர்ந்த ஒரு­வர், சிங்­கப்­பூ­ரர் ஒரு­வர் ஆகி­யோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்­க­ளின் உடல்­நிலை சீராக உள்ளது.

பட்­ட­றை­யில் பணி­கள் தற்­காலி­க­மாக நிறுத்­தி­வைக்­கப்­பட்டுள்­ளன. விபத்து குறித்து மனி­த­வள அமைச்சு விசா­ரித்து வரு­கிறது.