சிங்கப்பூரில் கொவிட்-19: அடுத்து என்ன?

சிங்கப்பூரில் கொவிட்-19: அடுத்து என்ன?

1 mins read
87ee4a27-1756-40f9-836b-849fefdd0987
-

ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்ப்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார். அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர் கூட்டத்தில் சிங்கப்பூரில் அடுத்து என்ன என்று விவரிக்கப்பட்டது. இதில் மூன்று முக்கிய சூழ்நிலைகள் முன்வைக்கப்பட்டன.

  1. புதிய கொவிட்-19 அலை தவிர்க்கப்படுகிறது

இதுவே சிங்கப்பூருக்கு சிறந்ததாக இருக்கும். இந்த நிலைமை ஏற்பட்டால், கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகளை மீண்டும் அமல்படுத்த தேவையில்லை.

  1. அடுத்து வருவது ஓமிக்ரான் அலை

ஓமிக்ரான் அலையிலிருந்து நாடு அண்மையில் மீண்டுவந்ததால், இந்த நிலைமை நமக்கு சாதகமாக இருக்கும். ஓமிக்ரான் கிருமியிலிருந்து நமக்கு நல்ல பாதுகாப்பும், நோய் எதிர்ப்பு சக்தியும் உருவாகியுள்ளது இதற்கு காரணம்.

  1. புதிய கிருமி; புதிய அலை

இந்த சூழ்நிலை சிங்கப்பூருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இந்த காரணத்தினால் தகுதிபெறும் அனைவரும் தடுப்பூசியும், கூடுதல் தடுப்பூசியும் போட்டுக்கொள்வது அவசியம். இதோடு தேவை ஏற்பட்டால், பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் கடுமையாக்கப்படும்.