தங்குவிடுதிவாசிகளுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும்

தங்குவிடுதிவாசிகளுக்கான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தொடர்ந்து பரிசீலிக்கப்படும்

1 mins read
73ef0140-ee32-4703-a8ea-e06c9672251b
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு கையில் வெள்ளைப் பட்டை அணிந்தவாறு வெளிநாட்டு ஊழியர்கள் கோவிலுக்குச் சென்றனர். கோப்புப்படம் -

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

தங்­கு­வி­டு­தி­களில் வசிக்­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் மத்­தி­யில் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக, நடை­முறை­யில் உள்ள திட்­டங்­கள் தொடர்ந்து பரி­சீ­லிக்­கப்­படும் என்று கூறி­னார் துணைப் பிர­த­மர் லாரன்ஸ் வோங்.

தங்­கு­வி­டு­தி­யில் வசிப்­போ­ருக்­குத் தற்­போது நடை­மு­றை­யில் இருக்­கும் கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­படுமா என்று நேற்­றைய அமைச்­சு­கள்­நி­லை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் தமிழ் முரசு எழுப்­பிய கேள்­விக்கு குழு­வின் இணைத் தலை­வர்­களில் ஒரு­வரான திரு வோங் இவ்­வாறு பதி­ல­ளித்­தார்.

கட்­டுப்­பா­டு­கள் குறித்து ஆரா­யப்­படும் என்று கூறிய அவர், கொவிட்-19 சூழ­லைத் தவிர்த்து நீண்­ட­கா­லத் திட்­ட­மாக ஒரே இடத்­தில் அதிக எண்­ணிக்­கை­யில் ஊழி­யர்­கள் கூடு­வது என்­றில்­லா­மல் பல இடங்­களில் சம­மான எண்­ணிக்­கை­யில் கூடு­வ­தற்­கான வழி­கள் ஆரா­யப்­ப­டு­கின்­றன என்­றார்.

கொவிட்-19க்கு அப்­பால், பாது­காப்பு, கூட்ட நெரி­சல் போன்ற வெவ்­வேறு பிரச்­சி­னை­க­ளை­யும் களைய அது ஏது­வாக அமை­யும் என்­றார்.

பொழு­து­போக்கு மையங்­கள் உட்­பட வார­யி­று­தி­களில் ஊழி­யர்­கள் தங்­கள் நேரத்­தைக் கழிக்க மேலும் அதிக தெரி­வு­கள் வழங்­கப்­ப­டு­வ­தற்­கான முயற்­சி­கள் நடந்­து­வ­ரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

ஞாயிற்­றுக்­கி­ழ­மை­க­ளி­லும் பொது விடு­முறை நாள்­க­ளி­லும் லிட்­டில் இந்­தியா, ஜூரோங் ஈஸ்ட், கேலாங் சிராய், சைனா­ட­வுன் ஆகிய நான்கு பிர­பல இடங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான அனு­மதி பெறும் திட்­டம் ஜூன் மாதம் 24ஆம் தேதி முதல் நடை­மு­றை­யில் உள்­ளது.

அதற்குமுன்­ அவர்­கள் சமூ­கத்­தில் எங்­குச் செல்­ல­வேண்­டு­மா­னா­லும் வெளி­யே­றும் அனு­மதி அட்­டை­யைப் பெற­வேண்­டி­யி­ருந்­தது.