5 முதல் 11 வயது சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

5 முதல் 11 வயது சிறார்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

2 mins read
0b4aae58-c4bc-4fb9-a47b-9d457725cae9
-

ஆண்­டி­று­தி­யில் மற்­றொரு கொவிட்-19 அலைக்கு சிங்­கப்­பூர் தயா­ராக இருக்­க­வேண்­டும் என்ற நிலை­யில், இவ்­வாண்டு இறு­திக்­குள் 5 முதல் 11 வய­து­டைய சிறார்­க­ளுக்கு பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள அழைப்பு விடுக்­கப்­படும்.

அதே சம­யம் ஆறு மாதக் குழந்­தை­கள் முதல் ஐந்து வயது வரை­யி­லான சிறார்­கள் வரை கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் போட்­டுக்­கொள்­வது குறித்து கூடிய விரை­வில் பரிந்­து­ரை­களும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றன.

இக்­கு­றிப்­பிட்ட வய­துப் பிரி­வி­ன­ருக்கு 'மொடெர்னா ஸ்பைக்­வாக்ஸ்' தடுப்­பூ­சி­யைப் போட­லாம் என்று சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம் அனு­மதி வழங்­கி­யதை அடுத்து கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் சுகா­தார அமைச்சு இதனை நேற்று தெரி­வித்­தது.

இந்­நி­லை­யில், கொவிட்-19க்கு எதி­ரான இரண்­டா­வது தடுப்­பூ­சி­யை, 5 முதல் 11 வயது வரை­யி­லான சிறார்­கள் போட்டு, குறைந்­தது ஐந்து மாதங்­க­ளுக்­குப் பின்­னர் 'ஃபைசர்-பயோ­என்­டெக் / கொமிர்­னாட்டி' பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ள­லாம் என்று பரிந்­துரை செய்­யப்­ப­டு­கிறது.

இவ்­வாண்­டின் இறு­திக் காலாண்­டில் தொடக்­கப்­பள்­ளித் தேர்­வு­கள் முடி­யும் தரு­ணத்­தில் ஐந்து முதல் 11 வய­து­டைய சிறார்­க­ளுக்கு பூஸ்­டர் தடுப்­பூ­சி­கள் போடு­வ­தற்­கான ஆயத்த பணி­களில் சுகா­தார அமைச்சு ஈடு­பட்டு வரு­கிறது.

இச்­சி­றார்­க­ளுக்­குக் குறிப்­பாக பூஸ்­டர் தடுப்­பூசி போடு­வ­தற்­காக ஐந்து தடுப்­பூசி நிலை­யங்­கள் இயங்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­துள்­ளார். இது குறித்த மேல்­வி­வ­ரங்­கள் பின்­னா­ளில் அறி­விக்­கப்­படும்.

பிள்­ளை­க­ளின் நலன் கருதி பெற்­றோர்­ கவலை எழுப்­பும் சாத்­தி­யம் உள்­ள­தால் தடுப்­பூ­சி­கள் வழங்­கப்­ப­டு­வது குறித்து சுகா­தார அமைச்சு முன்­ன­தா­கவே தெரி­விப்­பதா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

கிட்­டத்­தட்ட 6,000 இளம் பிள்­ளை­கள் தொடர்­பான ஆய்வு ஒன்­றில், தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டதை அடுத்து இதய தசை­யில் வீக்­கம் ஏற்­பட்ட சம்­ப­வம் ஏதும் பதி­வா­க­வில்லை என்று பகிர்ந்­து­கொண்­டார் திரு ஓங். அத்­து­டன் கடு­மை­யான பாதிப்­பு­கள் ஏற்­பட்ட சம்­ப­வங்­களும் மிகக் குறைவு என்­றார் அவர்.

கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­கும் இளம் பிள்­ளை­கள், கடு­மை­யாக நோய்­வாய்ப்­படும் அபா­யம் குறைவு என்­றா­லும் ஐந்து வய­துக்­குக் குறை­வான சிறார்­கள் பல­ருக்­குக் கடும் நோய் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் சுட்­டி­னார்.

அண்­மைய மாதங்­களில் கொவிட்-19 கார­ண­மாக இரு இளம் பிள்­ளை­கள் உயி­ரிழந்­து­விட்­ட­னர்.

இந்­நி­லை­யில் ஆறு மாதக் குழந்­தை­கள் முதல் ஐந்து வயது சிறார்­கள் வரை­யி­லான பிரி­வி­ன­ருக்கு 'மொடெர்னா' தடுப்­பூசி போட­லாம் என்ற ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­டால், சிறார்­க­ளின் பூஸ்­டர் தடுப்­பூ­சித் திட்­டத்­து­டன் ஒரே நேரத்­தில் அதே தடுப்­பூசி நிலை­யங்­களில் நடை­முறைப்­ப­டுத்­தப்­படும்.

இது பெற்­றோர்­க­ளுக்கு வச­தி­யாக இருக்­கும் என்­று அமைச்­சர் ஓங் தெரிவித்தார்.