பெரும்பாலான உட்புற இடங்களில்
முகக்கவசம் அணிவது, அடுத்த
திங்கட்கிழமை முதல் கட்டாயம்
இல்லை என்று அரசாங்கம்
அறிவித்துள்ளது. மற்ற நாடுகளில்
முகக்கவசம் அணிவது தொடர்பில்
எத்தகைய விதிமுறைகள் உள்ளன
என்பதை அறிந்துகொள்வோம்.
இந்தியா
சந்தைகள், மருத்துவமனைகள்,
பொதுப் போக்குவரத்து, தனியார்
வாடகை வாகனங்கள் ஆகியவற்றில்
முகக்கவசம் அணிவது கட்டாயம்.
இருப்பினும், விதிமுறைகளைப்
பின்பற்றும் விருப்புரிமை மக்களிடம்
விடப்பட்டுவிட்டது. கடுமையான
அமலாக்க நடவடிக்கைகளையும்
அதிகாரிகள் எடுப்பதில்லை.
மலேசியா
வெளிப்புற இடங்களில் இவ்வாண்டு
மே 1 முதல் முகக்கவசம் அணிவது
தேவையில்லை. இருப்பினும் பொது
உட்புறச் சூழல்களில் முகக்கவசம்
அணிவது கட்டாயம்.
தாய்லாந்து
ஜூன் முதல் முகக்கவசம் அணிவது
விருப்ப அடிப்படையில் உள்ளது.
இருப்பினும் கூட்டமான இடங்களில்
முகக்கவசம் அணிவது தொடர்பான
அறிவுறுத்தல் உள்ளது.
இந்தோனீசியா
பொது இடங்களில் முகக்கவசம்
அணிவது இவ்வாண்டு மே முதல்
கட்டாயமில்லை என்றாலும் உட்புற
இடங்களிலும் பொதுப்
போக்குவரத்திலும் கட்டாயம்.
கொவிட்-19 சம்பவங்கள் அதிகம் ஆனதையடுத்து ஜூலை 1
முதல் பொது இடங்களிலும்
முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டது.
ஐரோப்பா
ஐரோப்பாவில் முகக்கவசம்
அணிவது தொடர்பான
விதிமுறைகள் நாடுக்கு நாடு
வேறுபடுகின்றன. ஆனால்,
பெரும்பாலான நாடுகளில்
முகக்கவசம் அணிவது
கட்டாயமில்லை.

