கால்டெக்ஸ் நிறுவனம் நேற்று டீசல் விலையை ஒரு லிட்டருக்கு 7 காசும் பெட்ரோல் விலையை 3 காசும் உயர்த்தியது.
அதைத் தொடர்ந்து ஷெல் நிறுவனமும் அப்படியே செய்தது.
நிறுவனங்கள் எரி எண்ணெய் சில்லறை விற்பனை விலையைக் குறைத்து வந்தன. இந்த நிலையில், சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த விலை மறுபடியும் ஏறத் தொடங்கி இருக்கிறது.
இந்த இரு நிறுவனங்களின் பெட்ரோல் நிலையங்களில் டீசல் விலை லிட்டருக்கு இப்போது $2.89 ஆக இருக்கிறது.
சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கத்தின் சில்லறை விற்பனை விலை கண்காணிப்பு இணையத்தளமான 'ஃபியூயல் காக்கி' மூலம் இந்த நிலவரங்கள் தெரியவந்தன.

