வல்லுநர்கள் கருத்து: ஈரிலக்க பணவீக்கம் சாத்தியமில்லை

வல்லுநர்கள் கருத்து: ஈரிலக்க பணவீக்கம் சாத்தியமில்லை

2 mins read
0bea8b3e-b2c0-4a5e-9f2c-ec288c93d8ab
-

பண­வீக்­கம் உல­க­மெங்­கும் அதி­கரிக்­கிறது. இருந்­தா­லும் அது நாட்டுக்கு நாடு வேறு­ப­டு­கிறது. சில நாடு­களில் அது ஏறக்­கு­றைய 2 விழுக்­கா­டாக இருக்­கிறது. இதர நாடு­களில் 10 விழுக்­காட்­டுக்­கும் மேலாக பண­வீக்­கம் கூடியுள்ளது.

சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் ஏறக்­கு­றைய 7 விழுக்­கா­டாக உள்­ளது. இந்த நிலை­யில், பிரே­சில், பிரிட்டன், நெதர்­லாந்து போன்ற நாடு­களில் நில­வும் அள­விற்கு சிங்­கப்­பூ­ரில் பண­வீக்­கம் ஈரி­லக்க அளவை எட்­டாது என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக ஓசி­பிசி வங்­கி­யின் தலைமை பொரு­ளி­யல் வல்­லு­நர் செலினா லிங் கூறு­கி­றார்.

சிங்­கப்­பூ­ரின் பண­வீக்­கம் ஈரி­லக்க அளவை எட்ட வேண்­டு­மென்­றால் அதற்கு சேவைத் துறை­யில் கணி­ச­மான பண­வீக்க அதி­க­ரிப்பு இருந்­தாக வேண்­டும் என்று சிஐஎம்பி நிறு­வ­னத்­தின் பொரு­ளி­யல் வல்­லு­நர் சோங் செங் ஊன் கூறு­கி­றார்.

பண­வீக்க விகி­தங்­கள் பரந்த அள­வில் மாறு­ப­டக்­கூ­டும் என்­பதை திரு சோங் சுட்­டி­னார்.

ஒட்­டு­மொத்த பண­வீக்­கத்தைக் கணக்­கிட பயன்­ப­டுத்­தப்­படும் சரக்கு, சேவை­க­ளின் வகைகள் நாட்­டுக்கு நாடு மாறு­படும் என்­பதே இதற்­கான கார­ணம் என்று அவர் விளக்­கி­னார்.

பெரிய நாடு­க­ளைப் பொறுத்­த­வரை நகர பகு­தி­களும் கிரா­மப் பகு­தி­களும் இருப்­ப­தால் இது பெரி­தும் சாத்­தி­யம் என்­றார் அவர்.

இந்­தோ­னீ­சி­யாவை எடுத்­துக் கொண்­டால் பண­வீக்­கத்தை கணக்­கி­டக்கூடிய அம்­சங்­களில் சுமார் 40% உண­வுப் பொருள்­காக இருக்­கும். ஆகை­யால், உண­வுப்­பொருள்­ க­ளின் விலை­கள் ஏறி­னால் அந்த நாட்­டின் பண­வீக்­க­மும் கூடும் என்­றார் அவர்.

இந்­தோ­னீ­சி­யா­வின் ஆகப் புதிய பண­வீக்க விகி­தம் 4.94 விழுக்­காடாக இருக்­கிறது.

சிங்­கப்­பூர் போன்ற சிறிய நாடு­களைப் பொறுத்­த­வரை உண­வுப்­பொ­ருள்­கள், சேவை­களை விட பண­வீக்க கணக்­கீட்­டில் குறைந்த இடத்­தையே பிடிக்­கின்­றன.

சேவைத் துறை­யைப் பொறுத்­த­வரை செலவு அதி­க­ரிக்­கிறது. ஊழி­யர் பற்­றாக்­குறை இருப்­பதே அதற்­கான கார­ணம்.

அதோடு மட்­டு­மின்றி பொருள்­களின் அதிக விலை, சேவைத் துறை வழி­யா­கத்­தான் பல­ரை­யும் சென்றடை­கிறது.

வெவ்­வே­றான பொருள்­களும் அர­சாங்­கம் எப்­படி செயல்­ப­டு­கிறது என்­ப­தும் பண­வீக்­கத்­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும் இதர அம்­சங்­கள். சிங்­கப்­பூ­ரில் அர­சாங்­கம் பொருள், சேவை வரிக் கழி­வு­களை வழங்கி இருக்­கிறது.

மலே­சி­யா­வில் கோழி­கள் போன்ற முக்­கிய பொருள்­க­ளுக்கு விலை வரம்பு நிர்­ண­யிக்­கப்­பட்டு இருக்­கிறது. ஹாங்­காங்கை பொறுத்­த­வரை அர­சாங்­கம் தீவி­ர­மாக தலை­யிட்டு குடும்­பங்­க­ளுக்கு தள்­ளு­ப­டி­களை அல்­லது மானி­யங்­களை அளித்து உத­வு­கிறது.

இதன் கார­ண­மாக ஹாங்­காங்­கில் பண­வீக்­கம் 2 விழுக்­காடு கூட இல்லை என்றார் திரு சோங்.

பிரிட்­ட­னில் உணவு, குடி­யி­ருப்பு, போக்­கு­வ­ரத்து செலவு பண­வீக்­கத்­தில் முக்­கிய இடத்தை வகிக்­கின்­றன. ஆகை­யால், அங்கு பண­வீக்­கம் 10.1% ஆக இருக்­கிறது என்று திரு­வாட்டி லிங் கூறினார்.