பத்தில் எட்டு நிறுவனங்களிடம் அதாவது, 58 விழுக்காடு சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் போதுமான நிதி உள்ளது. இதை வைத்து அந்நிறுவனங்கள் குறைந்தது ஆறு மாதங்களுக்கு தாக்குப்பிடிக்க முடியும் என்று ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
ஆசியான் நாடுகள் இடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது 2வது ஆக அதிக விழுக்காடு என்பதும் தெரிய வந்துள்ளது.
வியட்னாம் 65 விழுக்காட்டுடன் முதல் இடத்தைக் கைப்பற்றி உள்ளது.
இதற்கு அடுத்த நிலையில் சிங்கப்பூர் வந்துள்ளது.
இந்தோனீசியா (54 விழுக்காடு), மலேசியா (46 விழுக்காடு), தாய்லாந்து (43 விழுக்காடு) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
யுஓபி, ஆக்செண்டர், டன் & பிராட்ஸ்திரீட் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் ஆசியான் நாடுகளில் உள்ள 1,500 சிறிய, நடுத்தர நிறு வனங்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

