கடலில் விழுந்த பங்ளாதேஷ் ஊழியரின் உடல் கண்டுபிடிப்பு

துவாஸ் கப்­பல் பட்­ட­றை­யில் வேலை செய்­து­கொண்­டி­ருந்­த­போது கட­லில் விழுந்து காணா­மல்போன வெளி­நாட்டு ஊழி­ய­ரின் சட­லம் நேற்று கண்டு பிடிக்­கப்­பட்­டது.

கப்­பல்­க­ளைக் கட்­டும் தூணின் ஒரு பகுதி இடிந்­த­தில் அவர் கட­லில் விழுந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

பங்­ளா­தேஷ் நாட்­டைச் சேர்ந்த 38 வயது ஊழி­ய­ரின் குடும்­பத்­துக்கு தேவை­யான உத­வி­களை செய்து வரு­வ­தா­க­வும் இந்­தச் சம்­ப­வத்தை விசா­ரிக்­கும் அதி­கா­ரி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­வ­தா­க­வும் கெப்­பல் கப்­பல் பட்­டறை அறிக்கை தெரி­வித்­தது.

"ஒவ்­வொரு ஊழி­ய­ரின் உயி­ரை­யும் பாது­காப்­பை­யும் மிக­வும் மதிக்­கி­றோம். துய­ர­மா­ன சம்­ப­வம் குறித்து வருந்­து­கி­றோம்," என்­றும் அது கூறி­யது.

சம்­ப­வம் நிகழ்ந்த இடத்­துக்கு அருகே மிதந்த சட­லத்தை மீட்க அதி­கா­ரி­கள் உதவி வரு­வ­தாக நேற்று மதி­யம் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு அளித்த பேட்­டி­யில் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

கும­ரன் மரின் என்ற நிறு­வ­னத்­ தில் அந்த ஊழி­யர் பணி­யில் அமர்த்­தப்­பட்­டி­ருந்­த­தாக மனி­த­வள அமைச்சு முன்­ன­தாக தெரி­வித்­தி­ருந்­தது.

சென்ற திங்­கள்­கி­ழமை காலை 10.40 மணி­ய­ள­வில் கப்­பல்­க­ளைக் கட்­டும் இடத்­தில் ஊழி­யர் இருந்­த­போது பாரந்­தூக்கி சாய்ந்து விபத்து நேர்ந்­தது. இத­னால் நிலை­த­டு­மாறி கட­லில் விழுந்த அவர் காணா­மல் போனார்.

சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்பு படை அவரைத் தேடி மீட்­கும் பணி­யில் இறங்­கி­யது.

இந்த விபத்­தில் 29, 31 வய­தில் இருந்த இரண்டு பங்­ளா­தேஷ் ஊழி­யர்­களும் 48 வயது சீன நாட்­ட­வ­ரும் 40 வயது சிங்­கப்­பூர் ஒரு­வ­ரும் சிறு காயத்­து­டன் தப்­பி­னர். நால்­ வ­ரின் நிலைமை சீராக உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!