லாரி மோதி போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி மரணம்

லாரி மோதி போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி மரணம்

1 mins read
b491268b-7221-4789-8e37-7b9b35df5913
-

72 வயது சிங்கப்பூர் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் லாரி மோதி உயிரிழந்தார். இவ்வாண்டு வேலையிடத்தில் நடந்துள்ள 34வது மரணம் இது. ஆகஸ்ட் 16 அன்று லிம் சு காங் வட்டாரத்தில் விபத்து நடந்தது.

முக்கிய சாலைக்கு திரும்புவதற்காக லாரி பண்ணையின் முன்வாசலில் நின்றுகொண்டிருந்தது. போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி, லாரி ஓட்டுநரின் கவனத்தை பெற வாகனத்தின் இடது பக்கம் சென்றார். அங்கிருந்து லாரியின் முன்பக்கத்துக்கு சென்றார். அந்த சமயத்தில் வாகனம் முன் நகர்ந்து, அதிகாரியை மோதியது. மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அதிகாரி அங்கு உயிரிழந்தார்.

கன ரக வாகனங்களை சமாளிக்கும்போது போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரிகள் கவனமாக இருக்கவேண்டும் என்று மனிதவள அமைச்சு கூறியது.

இந்த ஆண்டு வேலையிடத்தில் நடந்துள்ள 34வது மரணம் இது.