தரமான செய்தியாளர்களை உருவாக்கும் நோக்கில் உபகாரச்சம்பளம்

தரமான செய்தியாளர்களை உருவாக்கும் நோக்கில் உபகாரச்சம்பளம்

2 mins read
651c778c-627e-4cae-82a3-8c4408cb4ccd
எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்டின் தலை­வர் கோ பூன் வான், உபகாரச் சம்பள விருதை யுகேஷ் கண்ணனுக்கு வழங்கினார். யுகேஷ் தமிழ் முரசுக்கான முதல் உபகாரச் சம்பளத்தைப் பெற்றுள்ளார். கடந்த சில மாதங்களாக அவர் தமிழ் முரசில் வேலைப் பயிற்சியில் ஈடுபட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

திவ்­யா­தாக்­‌‌‌ஷாய்னி

தர­மான செய்­தி­களை வழங்க சரி­யான பண்­பு­ந­லன்­க­ளு­ட­னான திறன்­மிக்­க­வர்­கள் தேவை என்­றும் அவர்­க­ளைப் பணி­ய­மர்த்­த­வும் தக்­க­வைக்­க­வும் ஆற்­றல் இருக்­க­வேண்­டும் என்று எஸ்­பி­எச் மீடியா டிரஸ்ட்­டின் தலை­வர் கோ பூன் வான் கூறி­யுள்­ளார்.

எஸ்­பி­எச் மீடி­யா­வும் எஸ்­பி­எச் அறநிறுவனமும் இணைந்து நேற்று நடத்­திய உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கும் விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய திரு கோ, நாம் நம் நோக்­கத்­தில் கவ­ன­மாக இருப்­பதை சக ஊழி­யர்­க­ளுக்­கும் வாச­கர்­க­ளுக்­கும் தெரி­விக்­கும் வண்­ணம் கூடு­தல் தொகை­யு­டன் உப­கா­ரச் சம்­ப­ளங்­கள் வழங்­கப்படு­வ­தா­கத் தெரி­வித்­தார்.

எஸ்­பி­எச் மீடியா நியூஸ் சென் ­டர் அரங்­கில் நடை­பெற்ற விழா­வில் 38 பேர் மூன்று வெவ்­வே­றுப் பிரிவு­களில் உப­கா­ரச் சம்­ப­ளங்­க­ளைப் பெற்­ற­னர்.

அவர்­களில் 12 பேர் எஸ்­பி­எச் மீடியா செய்தித்துறை உப­கார சம்­ப­ளத்­தை­யும் 14 பேர் எஸ்­பி­எச் ஊழி­யர்­க­ளின் பிள்­ளை­க­ளுக்­கான உப­கா­ரச் சம்­ப­ள­த்­தை­யும் பெற்­ற­னர். 12 பேருக்கு எஸ்­பி­எச் அற­நி­று­வ­னத்­தின் "லிம் கிம் சான்" நினைவு உப­கா­ரச் சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டது.

தமிழ் முர­சுக்­கான முதல் உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­றார் ரெட்டி கண்­ணன் யுகே‌ஷ், 21.

"தமிழ் முரசு செய்­தி­யா­ள­ருக்­கென முதல் உப­கா­ரச் சம்பளத்தை வழங்­கி­ இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கிறது. திறன்­மிக்க செய்­தி­யா­ளர்­கள் மூலம் தர­மான செய்­தி­களை வழங்­கு­வது எங்­கள் நோக்­கம்.

"எதிர்­கா­லத்­தில் இன்­னும் அதி­க­மா­னோர் உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்று தமிழ் முர­சில் பணி­யாற்ற முன்­ வரு­வார்­கள் என்று நம்­பு­கி­றேன்," என்று கூறி­னார் தமிழ் முர­சின் ஆசி­ரி­யர் ஜெ. ராஜேந்­தி­ரன்.

இந்த ஆண்டு, எஸ்­பி­எச் மீடியா செய்­தித்­துறை உப­கா­ரச் சம்­ப­ளத்­திற்கு மொத்­தம் 126 விண்­ணப்­பங்­கள் வந்­தன. கடந்த ஆண்­டு­டன் ஒப்­பி­டும்­போது இது மும்­மடங்கு அதி­கம்.

பல நேர்­கா­ணல்­கள், தேர்­வு­கள், வேலைப்­பயிற்சி, வேலைப்­ப­யற்சி மதிப்­பீடு ஆகி­ய­வற்­றுக்­குப் பிறகு 12 மாண­வர்­க­ளுக்கு மட்­டுமே எஸ்பிஎச் மீடியா செய்தித்துறை உப­கார சம்­ப­ளம் வழங்­கப்­பட்­டது.

எஸ்­பி­எச் அறக்­கட்­ட­ளை­யின் 'லிம் கிம் சான்' விரு­தைப் பெற்ற முவா­மினா, 23, தன் தாயா­ரால் தன்­னு­டை­ய கல்­விச் செல­வு­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­றும் அத­னால் இந்த உப­கா­ரச் சம்­ப­ளம் தன் படிப்­புச் செல­வுக்கு மிக­வும் கைகொ­டுக்­கும் என்று கூறி­னார்.

சில ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தமிழ் முர­சில் மாண­வச் செய்­தி­யா­ள­ராக அவர் பணி­யாற்­றி­னார்.

அதே விரு­தைப் பெற்ற மற்­றொ­ரு­வ­ரான நூருல் ஜெஸிமா, ஓராண்டு இடை­வே­ளைக்­குப் பிறகு பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு செல்­வ­தால் கல்­விக் கட்­ட­ணத்தை எப்­படி சமா­ளிப்­பது என்று யோசித்­துக் கொண்­டி­ருந்­த­தா­க­வும் இந்த விரு­தைப் பெற்­றது தனக்கு மன­நிம்­ம­தியை அளிப்­ப­தா­க­வும் கூறி­னார்.