தமிழ் முரசில் பணியாற்ற விரும்பும் யுகேஷ் கண்ணன், 21, தமிழ் மொழி, கலாசாரம், விளையாட்டு போன்ற துறைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.
தெலுங்கு தாய்மொழியாக இருந்தாலும் தமிழ்மொழி, பண்பாட்டில் அவருக்கு அதிக நாட்டமுண்டு. பள்ளிப் பருவத்தின் ஒவ்வொரு நிலையிலும் தமிழைக் கற்றபோது அது மென்மேலும் அழகாகத் தெரிந்தது என்று அவர் தமிழ் முரசிடம் கூறினார்.
தமிழ்மொழியிலும் மற்ற சமூக நடப்புகளிலும் அக்கறை உள்ள யுகேஷ், தன் திறமைகளை மேம் படுத்திக்கொள்ள தமிழ் முரசு நல்ல தளமாக அமைந்தது என்று தெரிவித்தார். .
தொண்டு செய்வதிலும் யுகேஷிற்கு விருப்பம் அதிகம். ஒவ்வொரு வாரமும் 'ஸ்போர்ட்ஸ்கேர்' எனும் தொண்டூழிய அமைப்பின்வழி வசதிக்குறைந்தப் பிள்ளைகளுக்கு இவர் காற்பந்து சொல்லிக் கொடுத்து வருகிறார்.
யுகேஷ் தற்போது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் அரசியல் துறையில் பயின்று வருகிறார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் முரசில் இவர் தன் பணியைத் தொடங்குவார்.
தமிழ் முரசில் தன்னுடைய வேலைப்பயற்சியைக் கடந்த சில மாதங்களாக செய்துவந்தார் யுகேஷ் கண்ணன்.

