சிங்கப்பூர் இலக்கிய பரிசு பெற்ற பெண்கள்

இவ்­வாண்­டின் சிங்­கப்­பூர் இலக்­கிய பரி­சினை தமிழ் பிரி­வில் மூன்று பெண் எழுத்­தா­ளர்­கள் பெற்­றுள்­ள­னர். சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­க­ளான ஆங்­கி­லம், சீனம், மலாய், தமிழ் ஆகிய மொழி­களில் வெளி­யி­டப்­படும் படைப்­பு­களுக்­காக ஈராண்­டு­க­ளுக்கு ஒரு முறை இவ்­வி­ருது வழங்­கப்­படுகிறது.

எழுத்­தா­ளர் ரமா சுரேஷ் தன்­னு­டைய 'அம்­ப­ரம்' புத்­த­கத்­திற்­காக புதி­னம் பிரி­வி­லும், வாச­கர்­க­ளின் விருப்­ப­மான புத்­த­கம் பிரி­வி­லும் இரு விரு­து­களை பெற்­றார். கவி­தைப் பிரி­வில் கவி­ஞர் இன்பா தன்­னு­டைய 'லயாங் லயாங் குருவிகளின் கீச்சொலிகள்' கவி­தைத் தொகுப்­பிற்­கா­க­வும் புத்­தாக்க இலக்­கி­யப் புதி­னம் அல்­லா­தவை பிரி­வில் எழுத்­தா­ளர் அழ­கு­நிலா தன்­னு­டைய 'மொழி­வ­ழிக் கனவு' புத்­த­கத்­திற்­கா­க­வும் விரு­து­க­ளைப் பெற்­ற­னர்.

"எழு­து­வது மாயா­ஜா­லத்­தைப் போன்­றது. அதற்­கென ஒரு புது உல­கத்­தில் புதிய காலத்­தில் புதிய மனி­த­ராக வாழ்ந்து எழு­த­வேண்­டும்," என்று ரமா சுரேஷ் கூறினார்.

"இந்த வெற்றி கிரீடமல்ல,

பொறுப்பும் சுமையும் அதிகமாகிறது.

மேலும் தீவிரமாக இயங்குவதற்கான ஊக்க சக்தியாக இருக்குமென நம்புகிறேன்," என்று இன்பா சொன்னார்.

சிங்­கப்­பூர் குடி­மக்­க­ளுக்­கா­வும் நிரந்­த­ர­வா­சி­க­ளுக்­கா­க­வும் நடத்­தப்­படும் இப்­போட்­டி­யில் விருது பெரும் ஒவ்­வொரு வெற்­றி­யா­ள­ருக்­கும் தலா 3,000 வெள்ளி ரொக்­கப் பரி­சும் கூடு­த­லாக சிறப்பு விரு­தும் வழங்­கப்­பட்­டன. கவிதை, புதி­னம் மற்­றும் புத்­தாக்க இலக்­கி­யப் புதி­னம் அல்­லா­தவை ஆகிய பிரி­வு­களில் ஒவ்­வொரு மொழிக்­கும் தலா ஒரு பரிசு வீதம் மொத்­தம் 12 பரி­சு­கள் வழங்­கப்­பட்­டன.

மேலும் ஒவ்­வொரு மொழி­யி­லும் வாச­கர்­க­ளின் விருப்­பப் புத்­த­கம் ஒன்­றிற்கு பொது­மக்­க­ளின் வாக்­க­ளிப்பு மூலம் ஒரு பரி­சும் வழங்­கப்­பட்­டது.

இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் சிறப்பு விருந்­தி­ன­ராக நிகழ்­வில் கலந்து கொண்­டார்.

இப்­போட்­டி­யில் தமிழ்­மொ­ழி­யின் கவி­தைப் பிரி­விற்கு முதன்மை நடு­வ­ராக இருந்த கல்வி அமைச்­சின் மூத்த பாடக்­க­லைத்­திட்ட வரைவு அதி­கா­ரி­யான திரு­மதி இரத்­தி­ன­மாலா பரி­ம­ளம், 60, "சிங்­கப்­பூ­ரின் கவிதை உலகை தெரிந்­து­கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்­பாக இருந்­தது. கவி­தை­க­ளின் பாடு­பொ­ருள், வடி­வம், புதிய சொற்­க­ளின் பயன்­பா­டு­கள், வெளிப்­ப­டுத்­தப்­பட்ட உணர்­வு­கள் ஆகி­ய­வற்­றின் மூலம் சிங்­கப்­பூர் கவி­ஞர்­க­ளின் தரத்தை உணர முடிந்­தது. சிங்­கப்­பூர் வாழ்­வி­யலை தங்­கள் படைப்­பு­கள் வழி தத்­ரூ­ப­மாக கண்­முன் நிறுத்­தி­னர்," என்று கூறி­னார்.

"இவ்­வாண்­டில் இறு­திப்­பட்­டி­ய­லுக்­குத் தேர்­வு­செய்­யப்­பட்ட படைப்­பு­கள் ஒவ்­வொன்­றும் ஒவ்­வொரு வகை­யில் சிறந்து விளங்­கி­ய­தால் அவற்­றுள் வெற்­றிப்­ப­டைப்பை மதிப்­பீடு செய்து கண்­ட­டை­வது நீதி­ப­தி­கள் குழு­வுக்­குப் பெரும் சவா­லாக இருந்­தது. போட்டி, வெற்றி இவை ஒரு­பக்­கம் இருந்­தா­லும் புதி­னம் அல்­லாத படைப்­பு­க­ளின் தரம் சிங்­கப்­பூ­ரில் தொடர்ந்து கூடிக்­கொண்டே போவதை இலக்­கி­யப் பரி­சுப் போட்­டிக்கு வந்­தி­ருந்த நூல்­கள் காட்­டி­ன," என்று கூறி­னார் புதி­னம் அல்­லாத படைப்­புப் பிரி­வின் தலைமை நடு­வ­ரான பொறி­யா­ளர் சிவா­னந்­தம் நீல­கண்­டன், 42.

புதி­னங்­க­ளுக்­கான பிரி­வில் முதன்மை நடு­வ­ராக இருந்த எழுத்­தா­ளர் சித்­து­ராஜ் பொன்­ராஜ், "சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் தமிழ் எழுத்­தா­ளர்­க­ளின் படைப்­பு­லகை அறிந்­து­கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்­பாக இருந்­தது.

"இம்­முறை தேர்­வுக்­காக வந்த படைப்­பு­கள் சிங்­கப்­பூ­ரில் இயங்­கும் தமிழ் எழுத்­தா­ளர்­கள் நவீன தமிழ் மற்­றும் உல­கத் தமிழ் இலக்­கி­யங்­க­ளின் செல்­வ­ழி­க­ளோடு ஏற்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கும் பரிச்­ச­யத்­தைக் காட்­டின. சிங்­கப்­பூர் என்­னும் தனித்­து­வ­மான நிலத்­தைச் சார்ந்த இலக்­கி­யத்­தைப் படைக்­கி­றோம் என்ற எண்­ணம் நம் எழுத்­தா­ளர்­க­ளி­டையே குறிப்­பி­டத்­தக்க வகை­யில் வளர்ந்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரில் மேலும் இத்­த­கைய படைப்­பு­கள் உரு­வா­கும் என்ற நம்­பிக்கை வலுப்­பெற்­றி­ருக்­கிறது," என்று தன்­னு­டைய அனு­ப­வத்­தைப் பகிர்ந்­து­கொண்­டார்.

மோனலிசா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!