விண்ணப்பத்தை ஆராயவுள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள்

விண்ணப்பத்தை ஆராயவுள்ள சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள்

1 mins read
f6c347e4-4ffa-4981-b4f9-373c001aef6e
-

'டிபா' எனப்­படும் மின்­னி­லக்கப் பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வத்­தில் சேர்ந்­து­கொள்ள கன­டா­வின் விண்­ணப்­பத்தை அதி­கா­ர­பூர்­வ­மாக ஆரா­யும் நட­வ­டிக்­கையை சிங்­கப்­பூர், சிலி, நியூ­சி­லாந்து ஆகிய நாடு­கள் மேற்­கொள்­ள­வி­ருக்­கின்­றன. இந்த மூன்று நாடு­களும் பங்­காளித்­து­வத்­தின் உறுப்­பு நாடுகள்.

மின்­னி­லக்க பொரு­ளி­யல் பங்­கா­ளித்­து­வத்­தில் சேர்ந்­து­கொள்ள கடந்த மே மாதம் ஒன்­ப­தாம் தேதி­யன்று கனடா விண்­ணப்­பம் செய்தது. 2020ஆம் ஆண்டு டிசம்­பம் மாதம் இந்த பங்­கா­ளித்­து­வம் நடப்புக்கு வந்­தது. அதன் மூலம் உறுப்பு நாடு­க­ளுக்­கி­டையே மின்­னி­லக்க வர்த்­த­கத்­தின் தொடர்­பில் புதிய அணு­கு­மு­றை­கள் உள்­ளிட்­டவை வரை­யப்­பட்­டன.

பங்­கா­ளித்­து­வம் கன­டா­வின் விண்­ணப்­பத்தை ஆரா­யும் என்று வர்த்­தக, தொழில் அமைச்சு, தொடர்பு, தக­வல் அமைச்சு, தக­வல்­தொ­டர்பு ஊடக மேம்­பாட்டு ஆணை­யம் ஆகி­யவை நேற்று இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. மின்­னி­லக்க பொரு­ளி­யல் பங்­காளித்­து­வத்­தில் உறுப்பு நாடு­களின் அர­சாங்­கங்­க­ளைப் பிர­தி­நி­திக்­கும் அதி­கா­ரி­கள் இடம்­பெற்றுள்­ள­னர்.

மின்னிலக்கப் பொருளியல் பங்காளித்துவத்தில் சேர்ந்துகொள்ள கனடா விண்ணப்பம்