ஆடவரைத் தாக்கிய இருவருக்குச் சிறை, பிரம்படி

ஆடவரைத் தாக்கிய இருவருக்குச் சிறை, பிரம்படி

1 mins read
bbadc2e7-6a33-497f-afc6-d5f088be2206
-

பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த இரு நண்­பர்­கள் ஓர் ஆட­வ­ரைக் கத்தி, கம்பு, 'நக்­கல்­டஸ்­டர்' எனும் ஆயு­தம் ஆகி­ய­வற்­றால் தாக்­கி­யிருக்­கின்­ற­னர். அந்த ஆட­வர் தன்னை பாலி­யல் பலாத்­கா­ரம் செய்­த­தாக நண்­பர்­களில் ஒரு­வரின் மனைவி கூறி­ய­தைத் தொடர்ந்து அவர்­கள் இச்­செ­யலை மேற்­கொண்­ட­னர்.

தாக்­கப்­பட்ட 29 வயது ஆட­வ­ரின் தலை­யில் பெரிய அள­வில் தோல் கிழிந்­தது. 'நக்­கல்­டஸ்­டர்' ஆயு­தத்­தால் அவர் தாக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து அந்­நிலை உரு­வா­னது. கத்­திக் குத்­துக் காயங்­கள், எலும்பு முறிவு ஆகி­ய­வற்­றா­லும் அவர் பாதிக்­கப்­பட்­டார்.

அவர் பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்படவில்லை.

குற்­ற­வா­ளி­களில் ஒரு­வ­ரான பெண்ணின் கணவர் 32 வயது ஆண்ட்ரே சென் சி'என்­னுக்கு எட்டு ஆண்­டுச் சிறைத் தண்­டனை­யும் ஒன்­பது பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன. மற்­றொரு குற்­றவா­ளி­யான 27 வயது கெர்­வன் வோங் ஹெங்­கிற்கு ஏழாண்­டுச் சிறைத் தண்­ட­னை­யும் ஆறு பிரம்­படி­களும் விதிக்­கப்­பட்­டன.