தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'பாரதி ஏர்டெல்'லில் தனது 3.3 விழுக்காட்டுப் பங்குகளை விற்கவுள்ள சிங்டெல்

1 mins read
99474031-fdb2-43b1-bcf2-3d9e8f4f742f
-

'பாரதி ஏர்­டெல்'லில் தான் வைத்­தி­ருக்­கும் பங்­கு­களில் 3.3 விழுக்­காட்டை விற்­கப்­போ­வ­தாக சிங்­டெல் அறி­வித்­துள்­ளது. பங்­கு­களை 2.25 பில்­லி­யன் வெள்­ளிக்கு விற்­கத் தான் ஒப்­புக்­கொண்­டுள்­ள­தாக சிங்­கப்­பூ­ரின் தொலைத் தொடர்பு நிறு­வ­ன­மான சிங்­டெல் தெரி­வித்­தது.

5ஜி கட்­ட­மைப்­புக்­கும் வர்த்­த­கத்தை விரி­வு­ப­டுத்­த­வும் நிதி திரட்ட இவ்­வாறு செய்­வ­தாக சிங்­டெல் கூறி­யது.

சிங்­டெல்­, இந்­தி­யா­வின் 'பாரதி என்­டர்­பி­ரை­சஸ்' ஆகியவை இணைந்து நடத்­தும் நிறு­வ­னம் 'பாரதி டெலி­காம்'. 3.3 விழுக்­காட்­டுப் பங்­கு­களை 'பாரதி டெலி­காம்' நிறு­வ­னத்­திடம் விற்­ப­தன் மூலம் 600 மில்­லி­யன் வெள்ளி லாபம் ஈட்­டப்­படும் என்று தான் எதிர்­பார்ப்­ப­தாக சிங்­டெல் அறிக்­கை­ ஒன்றில் குறிப்பிட்டது.

இதைத் தொடர்ந்து ஒட்­டு­மொத்­த­மாக 29.7 விழுக்­காட்டு 'ஏர்­டெல்' பங்­கு­களை சிங்­டெல் வைத்­தி­ருக்­கும். இந்த அறி­விப்­பிற்­குப் பிறகு நேற்று முன்தினம் சிங்­டெல்­லின் பங்கு விலை 1.9 விழுக்­காடு கூடி­யது.