சிங்கப்பூரில் 16வது குரங்கம்மை சம்பவம்

சிங்கப்பூரில் 16வது குரங்கம்மை சம்பவம்

1 mins read
614d9439-82c8-4b74-b384-4cfaf7672f19
படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூரில் மேலும் ஒரு குரங்கம்மை தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து சிங்கப்பூரில் மொத்தம் 16 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார அமைச்சு வாரந்தோறும் அதன் இணையத்தளத்தில் வெளியிடும் குரங்கம்மை தொற்று சம்பவங்கள் அறிக்கையில் இந்த ஆக அண்மைய சம்பவம் பதிவுசெய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 14 அன்று தொடங்கிய வாரத்தில் பாதிக்கப்பட்டவருக்கு தொற்று ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

குரங்கம்மை தொற்று குறித்த சுகாதார அமைச்சு ஆகக் கடைசி தகவலை ஆகஸ்ட் 5 அன்று வெளியிட்டது. இதில் சிங்கப்பூரின் 14வது, 15வது சம்பவங்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தன. இதோடு பாதிக்கப்பட்ட ஒருவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர் என்றும் தெரிவிக்கப்பட்டது. சமூகத்தொற்றுக்கு ஆளானவர் 54 வயதான ஆடவர் என்றும் அவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட 13வது நபருடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்பட்டிருந்தது.