1.2 மில்லியன் குடும்பங்கள் $100 பயனீட்டு உதவித்தொகை பெறவுள்ளன

1.2 மில்லியன் குடும்பங்கள் $100 பயனீட்டு உதவித்தொகை பெறவுள்ளன

1 mins read
8e31c1de-60ce-47b9-909c-18ef110af1cd
-

கிட்டத்தட்ட 1.2 மில்லியன் சிங்கப்பூர் குடும்பங்களுக்கு $100 பயனீட்டு உதவித் தொகை அளிக்கப்படும். தகுதிபெறும் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் இது வழங்கப்படும்.

குறைந்தது ஒரு சிங்கப்பூரரைக் கொண்ட குடும்பங்களுக்கு 'குடும்ப பயனீட்டு உதவித்தொகை' என்ற பெயரில் ஒருமுறை மட்டும் $100 மானியம் வழங்கப்படும். இந்த மானியத்தொகை செப்டம்பர் மாதத்திற்கான பயனீட்டுக் கட்டணக் கணக்கில் சேர்க்கப்படும்.

பணவீக்கத்தைச் சமாளிக்க $1.5 பில்லியன் உதவித் திட்டத்தை துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் ஜூன் மாதம் அறிவித்தார். இத்தொகை குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் எளிதில் பாதிப்படையக்கூடியவர்களுக்கும் பயனளிக்கும் என்றார் திரு வோங். இந்த அறிவிப்பின் ஒரு பகுதியாக இந்த 'குடும்ப பயனீட்டு உதவித்தொகை' வழங்கப்படுகிறது.