ஃபோர்ட் கேனிங் பூங்­கா­வில் புதிய மர­பு­டைமை, மணமூட்டிகள் காட்­சிக்­கூ­டம்

ஃபோர்ட் கேனிங் பூங்­கா­வில் புதிய மர­பு­டைமை, மணமூட்டிகள் காட்­சிக்­கூ­டம்

2 mins read
93c7d1f8-19b5-461a-89df-3684a8f95412
ஃபோர்ட் கேனிங் பூங்­கா­வில் நேற்று திறக்­கப்­பட்ட மர­பு­டைமை, மணமூட்டிகள் காட்­சிக்­கூ­டம். படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கடந்த 14-ஆம் நூற்­றாண்­டில் கண்டு­ பி­டிக்­கப்­பட்ட ஆலிவ் பச்சை நிற பீங்­கான் பொருள்­கள் ஃபோர்ட் கேனிங் பூங்­கா­வில் புதி­தாக திறக்­கப்­பட்ட மர­பு­டைமை மற்­றும் மணமூட்டிகள் (spices) காட்­சிக்­ கூ­டத்­தின் முக்­கிய அம்­சங்­க­ளா­கத் திகழ்­கின்­றன.

கடந்த 2018, 2019ஆம் ஆண்­டு­ களில் அங்கு மேற்­கொண்ட

அக­ழாய்­வுப் பணி­க­ளின்­போது

கண்­டு­பி­டிக்­கப்­பட்ட அந்­தப் பொருள்­கள் சிங்­கப்­பூ­ரின் வர­லாற்றை 700 ஆண்டுக­ளுக்­குப் பின்­னோக்­கிக் கொண்டு செல்­கிறது. தேசிய பூங்காக் கழ­கம் ஃபோர்ட் கேனிங் பூங்­கா­வில் நேற்று திறந்த மர­பு­டைமைக்

காட்­சிக்­கூ­டம் ஃபோர்ட் கேனிங் நிலை­யத்­தின் இரு மாடி­க­ளின் ஒரு பகு­தி­யில் அமைந்­துள்­ளது. அந்த நிலை­யம் கடந்த 1926ஆம் ஆண்டு பிரிட்­டிஷ் ராணுவ முகா­மா­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­டது.

தேசிய பூங்காக் கழ­கம் 350 சதுர மீட்­டர் பரப்­ப­ளவு கொண்ட மணமூட்டிகள் தோட்­டத்­தை­யும் நேற்று திறந்து வைத்­தது.

மரபு­டைமை காட்­சிக்­கூ­டம் ஃபோர்ட் கேனிங் மலை­யின் வர­லாற்­றுச் சிறப்­பை­யும் சிங்­கப்­பூ­ரின் கதை­யில் குறிப்­பாக 14ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்து ஆற்­றிய முக்­கிய பங்கையும் எடுத்­து­ரைக்­கிறது என்று நேற்று காட்­சிக்­கூட திறப்பு நிகழ்ச்­சிக்கு வந்­தி­ருந்த தேசிய வளர்ச்சி அமைச்­சர் டெஸ்­மண்ட் லீ குறிப்­பிட்­டார்.

ஃபோர்ட் கேனிங் வட்­டா­ரத்­தின் வர­லாற்­றை­யும் 2019ஆம் ஆண்டு அங்கு திறக்­கப்­பட்ட 9 பூங்­காக்­கள் பற்­றி­யும் விளக்­கும் ஒரு புத்­த­கத்­தை­யும் அமைச்­சர் நேற்று அறி­மு­கம் செய்து வைத்­தார்.

வரும் செப்­டம்­பர் 4 வரை தேசிய பூங்காக் கழ­கம் ஃபோர்ட் கேனிங் பூங்­கா­வில் விழா ஒன்றை நடத்­து­கிறது. குறிப்­பாக சிறார்­க­ளுக்­கான திரைப்­ப­டங்­களும் இல­வ­ச­மா­கக் கலந்­து­கொள்­ளும் நட­வ­டிக்­கை­களும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.