தேசிய சம்­பள மன்­றம் செப்­டம்­ப­ரில் கூடு­கிறது

தேசிய சம்­பள மன்­றம் செப்­டம்­ப­ரில் கூடு­கிறது

2 mins read
c1ef60cc-e1fb-498f-b37c-b2e40158204d
-

சம்­ப­ளம் மற்றும் வேலை தொடர்­பான தனது வரு­டாந்­திர வழி­காட்­டி­களை உரு­வாக்க தேசிய சம்­பள மன்­றம் வரும் செப்­டம்­பர் முதல் தேதி கூட­வி­ருக்­கிறது. கடந்த ஆண்­டின் பொரு­ளி­யல் மீட்­பு­நிலை, எதிர்­கால உலக பொரு­ளி­யல் நிலை­யின்மை போன்­ற­வற்­றைக் கருத்­தில் கொண்டு மன்­றம் வழி­காட்­டி­களை உரு­வாக்­கும்.

இவ்­வாண்டு டிசம்­பர் மாதம் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்­பர் மாதம் வரை­யி­லான சம்­பள, வேலை­யிட வழி­காட்­டி­கள் அக்­டோ­பர் மாத இறு­திக்­குள் அறி­விக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்று மனி­த­வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

குறைந்த வரு­மான ஊழி­யர்­

க­ளுக்­கான படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை பற்­றி­யும் மன்­றம் ஆலோ­சிக்­கும். கடந்த 2012ஆம் ஆண்டு முதன் முத­லில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை வெவ்­வேறு திறன்­க­ளைக் கொண்ட ஊழி­யர்­

க­ளுக்­கான குறைந்த பட்ச சம்­ப­ளம், பயிற்­சி­கள் ஆகி­ய­வற்றை வரை­ய­றுக்­கிறது.

அடுத்த ஆண்டு மார்ச் 1ம் ­தேதி நடப்­புக்கு வரும் நிர்­வா­கத்­து­றை­யில் பணி­பு­ரி­வோர், ஓட்­டு­நர் ஆகி­யோ­ருக்­கான படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­ப­ள­மு­றை­யும் பரி­சீ­லிக்­கப்­படும்.

கடந்த ஆண்டு குறைந்த வரு­மா­னம் ஈட்­டும் ஊழி­யர்­க­ளுக்­கான முத்­த­ரப்பு பணிக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­கள் வழி­காட்­டி­களில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டன.

உதா­ர­ணத்­திற்கு கடந்த ஆண்­டின் வழி­காட்­டி­களில் $2,000 வரை சம்­ப­ளம் பெறும் குறைந்த வரு­மான ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் $70 முதல் $90 வரை அல்­லது 4.5% முதல் 7.5% வரை உயரவேண்­டும் என்று பரிந்­து­ரைக்­கப்­பட்­டது.

படிப்­ப­டி­யாக உய­ரும் சம்­பள முறை, சில்­லறை வர்த்­த­கம், உணவு சேவை­கள், கழிவு நிர்­வா­கத் துறை போன்ற மேலும் பல துறை­க­ளை­யும் உள்­ள­டக்­கும் என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் கடந்த ஆண்டு அறி­வித்­தார்.

நிர்­வாக ஊழி­யர்­கள், அனைத்துத்துறை வாகன ஓட்­டு­நர்­கள் போன்­ற­வர்­கள் இத­னால் பய­ன­டை­வார்­கள்.

தற்­போ­தைய நிச்ச்­ச­ய­மற்ற உலக அர­சி­யல் சூழல், அதி­க­ரித்து வரும் வர்த்­த­கச் செல­வு­கள், வாழ்க்­கைச் செல­வி­னம் ஆகி­ய­வற்­றுக்கு மத்­தி­ யில் உற்­பத்­தி­த் தி­றன் அதி­க­ரிப்பை மைய­மா­கக் கொள்­ளக்­கூ­டிய சம்­பள உயர்­வுக்கு ஆத­ரவு கொடுக்க வர்த்­தக ஊழி­யர் அணி மாற்­றங்­

க­ளை­யும் நாம் மேற்­கொள்­ள­வேண்­டும் என்­றும் தேசி­ய சம்­பள மன்­றத் தலை­வர் பீட்­டர் சியா கூறி­னார்.

பொது­மக்­களும் சம்­ப­ளம் தொடர்­பான தங்­கள் கருத்­து­க­ளைப் பகிர்ந்­து­கொள்ள அழைக்­கப்­ப­டு­கி­றார்­கள். வரும் செப்­டம்­பர் 9ஆம் தேதிக்­குள் பொது­மக்­கள் தங்­கள் கருத்­து­களை இணை­யம்­வழி சமர்ப்­பிக்­க­லாம்.