அமைச்­சர் டியோ: சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்க எதிர்­கா­லத்தை பாது­காப்பதில் கவ­னம்

அமைச்­சர் டியோ: சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்க எதிர்­கா­லத்தை பாது­காப்பதில் கவ­னம்

2 mins read
f46d0395-8d9d-4208-89e5-f68ed31326f7
-

தொழில்­நுட்ப

நிறு­வ­னங்­கள்

அமெ­ரிக்­கா­வை­யும் சீனா­வை­யும்

கூட்­டாக உழைக்­கச் சொல்ல வேண்­டும் என அறி­வு­றுத்­தும் பேரா­சி­ரி­யர் கிஷோர்

மெஹ்­பு­பாணி

அமெ­ரிக்­கா­வும் சீனா­வும் தங்­கள் பகை­மையை நிறுத்­தி­விட்டு பரு­வ­நிலை மாற்­றம் போன்ற உலக விவ­கா­ரங்­களில் கூட்­டாக உழைக்­க­வேண்­டும் என்று தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் இரு நாடு­க­ளுக்­கும் அறி­வு­றுத்­த­வேண்­டும் என்­றும் சிங்­கப்­பூர் அர­ச­தந்­திரி கிஷோர் மெஹ்­பு­பாணி கூறி­யி­ருக்­கி­றார்.

இந்த அர­சி­யல் போட்­டித்­த­ன்மை இரு நாடு­க­ளுக்­கும் நன்மை பயக்­கப்­போ­வ­தில்லை என்­றும் இந்த வேளை­யில் பொது­வான சவால்­களில் கவ­னம் செலுத்த வேண்­டும் என்­றும் அவர் சொன்­னார்.

இரு நாடு­களும் குறிப்­பாக தங்களின் மேம்­பட்ட தொழில்­நுட்­பத்தை பகிர்ந்­து­கொள்­ளா­மல் இருப்­ப­தால் மற்ற நாடு­கள் ஏதா­வது ஒரு நாட்­டைச் சார்ந்த தொழில்­நுட்­பத்­தைத் தேர்ந்­தெ­டுக்­கும்

நிர்­பந்தத்­துக்கு ஆளா­கும் என்று அவர் விளக்­கி­னார்.

டெக்3 தொழில்­நுட்ப மாநாட்­டில் நேற்று பேசிய பேரா­சி­ரி­யர்

மெஹ்­பாணி வரும் ஆண்­டு­க­ளில் அமெ­ரிக்­கா­வுக்­கும் சீனா­வுக்­கும் இடை­யி­லான நெருக்­கடி மோச­மா­கும் என்­றும் சொன்­னார்.

சிங்­கப்­பூர் கணினி மன்­ற­மும் தக­வல்­தொ­டர்பு, ஊடக மேம்­பாட்டு ஆணை­ய­மும் இணைந்து நடத்­திய மாநாட்­டில் கலந்­து­கொண்ட தொடர்பு, தக­வல் அமைச்­சர் ஜோச­ஃபின் டியோ வர்த்­த­கங்­களும் நாடு­களும் வெவ்­வேறு கட்­ட­மைப்­பு­க­ளைத் தேர்ந்­தெ­டுக்­கும் சூழல் ஏற்­படும் அபா­யம் குறித்து தமது உரை­யில் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் மின்­னி­லக்க எதிர்­கா­லத்­தைப் பாது­காக்­கும் நட­வ­டிக்­கை­யால் மின்­னி­லக்க இணைப்பை மேம்­ப­டுத்தி பொரு­ளி­யல் போட்­டித்­தன்­மையை வலுப்­ப­டுத்த நாட்­டின் 5ஜி கட்­ட­மைப்­பில் கவ­னம் செலுத்­தப்­ப­டு­கிறது என்று அவர் கூறி­னார். தற்­போது சிங்­கப்­பூ­ரின் தொலைத் ­தொ­டர்பு நிறு­வ­னங்­கள் 5ஜி சேவை­களை வெளிப்­பு­றங்­களில் 50 விழுக்­காட்டு இடங்­களில் கிடைக்க வகை செய்­துள்­ளன என்று அவர் சுட்­டி­னார்.

தரவு புத்­தாக்­கத்­துக்கு வழி­

வ­குக்க சிங்­கப்­பூர் வட்­டார ரீதி­யி­லும் உலக ரீதி­யி­லும் தொடர்ந்து பங்­கா­ளித்­து­வத்தை ஏற்­ப­டுத்தி வரு­கிறது என்ற அவர், நாடு­க­ளுக்கு இடை­யி­லான தர­வு­கள் தடை இல்லாமல் பகிர்ந்­து

கொள்­ளப்­ப­டு­வ­தற்கு இந்த கூட்­டு­ற­வு­கள் வகை செய்­யும் என்­றும் சொன்­னார்.

''ஆனால் தற்­போது வர்த்­த­கங்­கள் வெவ்­வேறு தரவு கட்­ட­மைப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­து­வ­தில் சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றன,'' என்று அமைச்­சர் டியோ கூறி­னார்.

சில நாடு­கள் அதி­க­மான கட்­டுப்­பா­டு­களை அமல்­ப­டுத்­தி­யுள்­ளன என்­றும் அவை பொது­மக்­க­ளி­டையே எதிர்­ம­றை­யான பொரு­ளி­யல், சமூக தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என்­றும் அமைச்சர் டியோ குறிப்­பிட்­டார்.