பியுஷ் குப்தா: மூத்த ஊழி­யர்­கள் திறன்­களை வளர்த்­துக்­கொள்ள பயிற்சி அளிப்­பது நிறு­வ­னங்­க­ளின் பொறுப்பு

பியுஷ் குப்தா: மூத்த ஊழி­யர்­கள் திறன்­களை வளர்த்­துக்­கொள்ள பயிற்சி அளிப்­பது நிறு­வ­னங்­க­ளின் பொறுப்பு

2 mins read
cf0a960a-02ac-44a2-acfa-33caa4ec0dd3
படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மூத்த ஊழி­யர்­கள் தங்­கள் தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் திறன்­பே­சி­ க­ளை­யும் இணைய வங்கிச் சேவை­க­ளை­யும் காணொளி அழைப்­பு­க­ளை­யும் பயன்­ப­டுத்­தக் கற்­றுக்­கொண்­டால் மின்­னி­லக்­க­ம­ய­மாகி வரும் வேலை இடங்­க­ளி­லும் அவர்­க­ள் தங்­கள் திறன்­களை வளர்த்துக்கொள்ளலாம் என்று கூறி­னார் டிபி­எஸ் வங்கி தலைமை நிர்­வாக அதிகாரி திரு பியுஷ் குப்தா(படம்).

கடந்த சில ஆண்­டு­க­ளாக பல மூத்த ஊழி­யர்­கள் இவ்வாறு செய்து வந்துள்ளனர்வந்­துள்­ள­னர் என்­றும் அவர் சுட்­டி­னார்.

''உங்­கள் தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் உங்­கள் வாழ்க்கை முறை­யை­யும் மாற்­றிக்­கொள்ள முடி­யும் என்­றால் உங்­க­ளால் உங்­கள் தொழிற்­துறை வாழ்க்­கை­யி­லும் மாற முடி­யாது என்று எப்­படி எங்­க­ளால் எண்ண முடி­யும்?'' என்­றார் திரு குப்தா.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக்­க­ழகத்­தில் வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற நன்­யாங் வர்த்­த­கப் பள்­ளி­யின் சிறப்பு நிகழ்ச்­சி­யில் சிறப்பு பேச்­சா­ள­ரா­கக் கலந்­து­கொண்­டார் திரு குப்தா.

கிட்­டத்­தட்ட 1,000 பேர் நேர­டி­யா­க­வும் இணை­யத்­தி­லும் இந்­நி­கழ்ச்­சி­யில் கலந்­து­கொண்­ட­னர். பல­த­ரப்­பட்ட அம்­சங்­க­ளைப் பற்றி திரு குப்தா பேசி­னார்.

அதில் கேள்வி பதில் அங்­கத்­தில் கேட்­கப்­பட்ட கேள்­வி­க­ளுக்­கும் அவர் பதி­ல­ளித்­தார்.

புதிய திறன்­களை எளி­தில் கற்­றுக்­கொள்ள நிறு­வ­னங்­கள் வகை செய்யாததால்தான் மூத்த ஊழியர்கள் புதிய தொழில்­

நுட்­பத்தை வேலை­யி­டங்­களில் பயன்­ப­டுத்த சிர­மப்­ப­டு­கி­றார்­கள் என்­றும் அந்­தப் பொறுப்பு நிறு­வ­னங்­க­ளு­டை­யது என்­றும் திரு குப்தா குறிப்­பிட்­டார்.

டிபி­எஸ் நிறு­வ­னத்­திற்கு இது நன்கு புரி­யும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு முதல் அவ்­வங்­கி­யின் தலை­மைப் பொறுப்பை வகிக்­கும் திரு குப்தா விளக்­கி­னார். உதா­ர­ணத்­திற்கு தங்­கள் வங்­கிக் கிளை­க­ளி­லும் தொலை­பேசி அழைப்பு நிலை­யங்­க­ளி­லும் அதி­க­ரித்­து­வ­ரும் தானி­யக்­க­ம­ய­மா­த­லால் கிட்­டத்­தட்ட 1,600 வேலை­கள் நான்கு ஆண்­டு­களில் இல்­லா­மல் போய்­வி­டும் என்­பதை 2016ஆம் ஆண்டு வங்கி உணர்ந்­தது.

அப்­போது தொழிற்­சங்­கங்­க­ளு­டைன் இணைந்து திறன்­களை வளர்த்­துக்­கொள்ள கடப்­பாடு கொண்ட 1,600 பேருக்­கும் பயிற்­சி­க­ளைக் கொடுக்க வங்கி உறுதி அளித்­தது என்­றார் 62 வயது திரு குப்தா.

கிட்­டத்­தட்ட 400 பேர் தங்­கள் வேலை­களை விட்டு வில­கி­னர். மீத­முள்ள 1,200 பேரில் 1,000க்கும் மேற்­பட்­டோர் மறுபயிற்சி பெற்ற பிறகு வங்­கி­யி­லேயே வேறு சில பொறுப்­பு­களை ஏற்­ற­னர் என்று திரு பியுஷ் குப்தா விவ­ரித்­தார்.