செய்­திக்­கொத்து

செய்­திக்­கொத்து

3 mins read
37bb1c97-fa05-49c6-9454-53dc3d3c4ad1
-

நீண்டகால உறவை மறு­உ­றுதி செய்­து­கொண்ட சிங்­கப்­பூர், புருணை

சுல்­தான் போல்­கியா நேற்றுமுன்தினம் பிரத­மர் லீ சியன் லூங்­கை சந்­தித்­துப் பேசி­னார். படம்: தொடர்பு, தகவல் அமைச்சு

தங்­க­ளுக்கு இடையே உள்ள சிறப்­பான, நீண்டகால உறவை சிங்­கப்­பூ­ரும் புரு­ணை­யும் மறு உறுதி செய்­து­கொண்­டன. சிங்­கப்­பூர் வந்­தி­ருந்த புருணை சுல்­தான் ஹச­னல் போல்­கி­யா தனது இரு­நாள் பய­ணத்தை நேற்று முன்தினம் முடித்­துக்­கொண்­டார்.

அவ­ரது வரு­கை­யின்­போது இரு நாடு­க­ளுக்­கி­டையே எரி­பொ­ருள், பசு­மைப் பொரு­ளி­யல், உணவு, மருத்­துவ பொருள் விநி­யோ­கம் உள்­ளிட்ட துறை­களில்

ஒத்­து­ழைப்பை மேலும் வலுப்­ப­டுத்­தும் வழி­கள் பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்­டது என்று சிங்­கப்­பூ­ரின் வெளி­யு­றவு அமைச்சு தெரி­வித்­தது.

சுல்­தான் போல்­கியா நேற்று முன்தினம் பிரத­மர் லீ சியன் லூங்­கை சந்­தித்­துப் பேசி­னார்.

சுல்­தான் போல்­கி­யா­வின் 76ஆவது பிறந்­த­நாள்

விழா­வில் சில வாரங்­க­ளுக்கு முன்­னால் அவ­ரைக் கடை­சி­யா­கச் சந்­தித்­த­தா­க­வும் நேற்று அவரை மீண்­டும் சந்­தித்து இரு­நாட்டு நல்­லு­றவை வலுப்­ப­டுத்­திக்­கொண்­ட­தில் மகிழ்ச்சி என்­றும் பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இரு நாடு­களும் மொத்­தம் நான்கு பரிந்­து­ணர்வு

ஒப்­பந்­தங்­களில் முன்­ன­தா­கக் கையெ­ழுத்­திட்­டன.

பொதுச் சேவையை மேம்­ப­டுத்­தும் ஒரு ஒப்­பந்­தம்

புரு­ணை­யைச் சேர்ந்த அரசு அதி­கா­ரி­கள் சிங்­கப்­பூர் அமைச்­சு­க­ளி­லும் அரசு சார் ஆணை­யங்­க­ளி­லும் இணைந்து பயிற்சி பெற வழி வகுக்­கும்.

இரு நாடு­க­ளுக்­கும் இடையே பொரு­ளி­யல் ஒத்­து­ழைப்பு நீண்­ட­கா­ல­மாக தொடர்­கிறது. புருணை உட­னான சிங்­கப்­பூ­ரின் வர்த்­த­கம் 2020லிருந்து 24 விழுக்­காடு

அதி­க­ரித்து 2021ல் 2.7 பில்­லி­யன் வெள்­ளியை

எட்­டி­யுள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் 16வது குரங்­கம்மை தொற்றுச் சம்­ப­வம்

சிங்­கப்­பூ­ரில் மேலும் ஒரு குரங்­கம்மை தொற்றுச் சம்­ப­வம் உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. இதை­யும் சேர்த்து சிங்­கப்­பூ­ரில் மொத்­தம் 16 சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளன.

சுகா­தார அமைச்சு வாரந்­தோ­றும் அதன் இணை­யத்­த­ளத்­தில் வெளி­யி­டும் குரங்­கம்மை தொற்றுச் சம்­ப­வங்­கள் அறிக்­கை­யில் இந்த ஆக அண்­மைய சம்­ப­வம் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆகஸ்ட் 14 அன்று தொடங்­கிய வாரத்­தில் பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு தொற்று ஏற்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

குரங்­கம்மை தொற்று குறித்த சுகா­தார அமைச்சு ஆகக் கடைசி தக­வலை ஆகஸ்ட் 5 அன்று வெளி­யிட்­டது. இதில் சிங்­கப்­பூ­ரின் 14வது, 15வது சம்­ப­வங்­கள் பதி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இதோடு பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. சமூ­கத்­தொற்­றுக்கு ஆளா­ன­வர் 54 வய­தான ஆட­வர் என்­றும் அவ­ருக்கு தொற்று உறு­தி­செய்­யப்­பட்ட 13வது நப­ரு­டன் தொடர்பு இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டி­ருந்­தது.

சிங்­கப்­பூர் உற்பதித்துறை 0.6% வளர்ச்சி கண்டது

சிங்­கப்­பூ­ரின் உற்­பத்­தித்­துறை ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த ஜூலை மாதம் 0.6 விழுக்­காடு வளர்ச்சி கண்­டுள்­ளது. மின்­னி­யல் மற்­றும் உயி­ரி­யல் உற்­பத்­தி­யில் ஏற்­பட்ட சரி­வி­னால் இந்த மித­மான வளர்ச்சி என்று பொரு­ளி­யல் வளர்ச்சிக் கழ­கம் நேற்று வெளி­யிட்ட தர­வு­களில் தெரி­விக்­கப்­பட்­டது.

புளூம்­பர்க் கருத்­துக்­க­ணிப்­பில் ஜூலை மாதத்­தில் 5.3% வளர்ச்சி ஏற்­படும் என பொரு­ளி­யல் நிபு­ணர்­க­ள் முன்­ன­தாக கணித்­த­னர்.

உயி­ரி­யல் மருத்­துவ உற்­பத்­தி­யைத் தவிர்த்து மற்ற துறை­களில் 2.9 விழுக்­காடு வளர்ச்சி பதி­வா­னது.

மின்­னி­யல் துறை கடந்த மாதம் 6.3% குறைந்­தது.