$32 மி. சொகுசுப் பொருள் மோசடி: தொடரும் விசாரணை

$32 மி. சொகுசுப் பொருள் மோசடி: தொடரும் விசாரணை

1 mins read
3da538fb-7b87-4120-8336-e2cb7daecd7f
-

$32 மில்­லி­யன் வெள்ளி மதிப்­புள்ள சொகு­சுப் பொருள்­களை விற்­ப­தா­கக் கூறி வாடிக்­கை­யா­ளர்­க­ளி­டம் அவற்றை ஒப்­ப­டைக்­கா­மல் தலை மறை­வாகி, பிறகு பிடி­பட்ட தம்­ப­தி­யின் வழக்கு விசா­ரணை தொடர்­கிறது.

சிங்­கப்­பூ­ர­ரான பி ஜியா­பெங், தாய்­லாந்து நாட்­ட­வ­ரான அவ­ரது மனைவி பன்­சூக் சிரி­விப்பா இரு­வர் மீதான மோசடி வழக்கு, வழக்­குக்கு முந்­திய விசா­ர­ணைக்­காக ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. அக்­டோ­பர் 11ஆம் தேதி வழக்­குக்கு முந்­திய கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­றும்.

வழக்­குக்கு முந்­திய கலந்­து­ரை­யா­ட­லில் இரு­த­ரப்பு வழக்­க­றி­ஞர்­களும் கூடி, வழக்கை கையா­ளும் வழி­கள் பற்றி ஆலோ­சிப்­பார்­கள். இதில் பொது­மக்­க­ளுக்கு அனு­மதி இல்லை.

பி, பன்­சூக் இரு­வ­ருக்­கும் நேற்று மீண்­டும் பிணை வழங்­கப்­ப­டா­த­தால் அவர்­கள் தொடர்ந்து தடுப்­புக்­கா­வ­லில் வைக்­கப்­பட்­ட­னர்.

கடந்த ஜன­வரி முதல் ஜூன் வரை இரு­வ­ரும் டிரேட்­நே­ஷன், டிரேட்­லக்­‌ஷரி நிறு­வ­னங்­க­ளின் வாடிக்­கை­யா­ளர்­க­ளைத் திட்­ட­மிட்டு ஏமாற்­றி­னர் என்று கூறப்­பட்­டது.

வாடிக்­கை­யார்­க­ளி­டம் சொகுசு கைக்­க­டி­கா­ரங்­க­ளை­யும் கைப்பை களை­யும் விற்­ப­தா­கக் கூறி பணம் வாங்கி ஏமாற்­றி­னர். அவர்­கள் மீது 180க்கும் மேற்­பட்ட காவல்­துறை புகார்­கள் அளிக்­கப்­பட்­டன. நாட்­டை­விட்டு தப்­பித்த அவர்­கள் ஜோகூ­ரில் பிடி­பட்­ட­னர்.