சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர்

சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு தந்த ஆசிரியர்

1 mins read
026f56ec-1d65-4245-b00b-be8f72754175
-

தொடக்­கப்­பள்ளி ஆசி­ரி­யர் ஒரு­வர், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, பள்ளி உள்­ளிட்ட இடங்­களில் மூன்று முறை ஒரு சிறு­மிக்கு பாலி­யல் தொந்­த­ரவு கொடுத்­தார்.

தற்­போது 36 வய­தா­கும் அந்த ஆட­வர், சிறு­மிக்கு 10 முதல் 13 வய­தி­ருக்­கும் வரை குற்­றங்­ களைப் புரிந்­தார் என்று கூறப்­பட்­டது. சிறுமி அவ­ரது மாண­வி­யாக இருந்­தாரா என்று நீதி­மன்ற ஆவ­ணங்­கள் கூற­வில்லை.

பாலி­யல் தொந்­த­ரவு அளித்­த­தன் தொடர்­பில் ஆட­வர்­மீது கடந்த புதன்­கி­ழமை மூன்று குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­பட்­டன. அவ­ருக்கு 10,000 வெள்ளி பிணை நிர்­ண­யிக்­கப்­பட்­டது.

சிறு­மி­யின் அடை­யா­ளத்தை மறைக்­கும் பொருட்டு ஆட­வ­ரைப் பற்­றியோ பள்­ளி­யைப் பற்­றியோ விவ­ரங்­களை வெளி­யிட முடி­யாது.

இச்­சம்­ப­வம் பற்றி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சுக்கு நேற்று அனுப்­பிய அறிக்­கை­யில், அந்த நபர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் தற்­கா­லி­கப் பணி­நீக்­கம் செய்­யப்­பட்­ட­தா­க­வும் அவர் எந்­தப் பள்ளி யிலும் தற்­போது பணி­யாற்ற வில்லை என்­றும் தெரி­வித்­தது.

14 வய­துக்­கும் குறைந்­த­வர்­ க­ளுக்கு எதி­ரான பாலி­யல் தொந்­த­ரவுக் குற்­றங்­க­ளைப் புரிந்­தோ­ருக்கு ஐந்­தாண்டு வரை சிறைத்­தண்­டனை, அப­ரா­தம், பிரம்­படி அல்­லது இவை அனைத்­தும் விதிக்­கப்­ப­ட­லாம்.