தீவெங்கும் சோதனைகளில் 134 பேர் கைது: $555,000 மதிப்புள்ள போதை மருந்துகள், காற்றழுத்தத் துப்பாக்கி பிடிபட்டன

மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடத்­திய சோத­னை­களில், 134 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

$555,000 சந்தை மதிப்­புள்ள போதை மருந்­து­க­ளு­டன் காற்­ற­ழுத்­தத் துப்­பாக்­கி­யும் அதன் குண்­டு­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு இதை நேற்று தெரி­வித்­தது.

கைப்­பற்­றப்­பட்ட போதை மருந்­து­களில் 3,730 கிராம் போதை­மிகு அபின், 866 கிராம் 'ஐஸ்', 5,240 கிராம் கஞ்சா, இரண்டு கிராம் கெட்­ட­மின், 51 எக்ஸ்­டசி மாத்­தி­ரை­கள், 108 எரி­மின்-5 மாத்­தி­ரை­களும் அடங்­கும். புக்­கிட் பாத்­தோக், காலாங், செங்­காங் உள்­ளிட்ட இடங்­களில் சோத­னை­கள் நடத்­தப்­பட்­ட­தாக மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு கூறி­யது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சிங்­கப்­பூர் அஞ்­சல் நிலை­யத்­திலுள்ள குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணைய அதி­கா­ரி­கள் ஓர் பொட்­ட­லத்தை ஊடு­க­ருவியைக் கொண்டு வருடி­ய­போது அது சரி­யாய் இல்லை என்­ப­தைக் கண்­ட­றிந்­த­னர்.

அதில் இருந்த இசை­வட்­டில் 26 கிராம் கஞ்சா கண்­டு­பி­டிக்­கப்­பட்­டதை அடுத்து மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரி­வி­டம் அது ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

கடந்த புதன்­கி­ழ­மை­யும் வெள்­ளிக்­கி­ழ­மை­யும் கிம் மோ ரோடு அருகே அதி­கா­ரி­கள் 21 வய­துள்ள இரண்டு சிங்­கப்­பூர் ஆட­வர்­க­ளைக் கைது செய்­த­னர்.

அவர்­களில் ஒரு­வ­ரி­ட­மும் அவ­ரது வீட்­டி­லும் சுமார் 191 கிராம் கஞ்­சா­வும் போதைப் பொருள் புழங்­கு­வ­தற்­கான சாத­னங்­களும் கைப்­பற்­றப்­பட்­டன. அவ­ரது காரில் காற்­ற­ழுத்­தத் துப்­பாக்­கி­யும் குண்டு களும் (கீழ்ப்­ப­டம்) கைப்­பற்­றப்­பட்டு காவல்­து­றை­யி­டம் தரப்­பட்­டன.

செவ்­வாய்க்­கி­ழமை காலை சாய் சீ அவென்யூ அருகே உள்ள வீட்­டில் நடந்த சோத­னை­யில், 58, 59 வய­துள்ள இரண்டு சிங்­கப்­பூர் ஆட­வர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அந்த வீட்­டில் போதை­மிகு அபி­னும் மெத்­த­டோ­னும் கைப்­பற்­றப்­பட்­டன. கைதா­கும் முன்­னர் இரு­வ­ரும் சன்­ன­லுக்கு வெளியே போதை மருந்­து­களை வீசி­னர் என்று நம்­பப்­ப­டு­கிறது. அதி­கா­ரி­கள் கைகளில் 13 கிராம் போதை­மிகு அபி­னும் உறிஞ்­சு­கு­ழாய்­களும் சிக்­கின.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!